பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. என்னவெல்லாம் நடக்கும்? எப்படி நடக்கும்?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சி தப்புமா இல்லை கவிழுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 15 மாதங்களில் 3-ஆவது முறையாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு என்பதை பார்ப்போம்.

Karnataka trust vote: The possible scenarios today

கடந்த 2018-ஆம் ஆண்டு 6 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பாவை போல் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது உருக்கமாக பேச வாய்ப்புள்ளது. இதனால் வாக்கெடுப்பு நடைபெறாமலும் போகலாம்.

குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்து அதன் மீது விவாதம் நடத்த கோரலாம். அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது விவாதம் நடத்துவர். விவாதத்தின் முடிவில் குமாரசாமி பதில் அளிப்பார்.

குமாரசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தால் சபாநாயகர் அதை அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்துவார்.

இதற்கு முன்னதாக சட்டசபையில் ஒரு மணி அடிக்கும். அப்போது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இருக்கைகளில் அமர வேண்டும்.

இந்த மணி அடித்தவுடன் சட்டசபையின் அனைத்து வாயில்களும் அடைக்கப்படும். எனவே எந்த உறுப்பினரும் வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியாது.

இருக்கை வரிசையின்படி சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்துவார். அது ஆளும் கட்சிக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருக்கக் கூடும். இந்த வாய்ப்புகளை குமாரசாமி கையில் எடுப்பார் என்பதை பார்ப்போம்.

English summary
It would be for the third time that a motion on trust would take place ever since Karnataka delivered a fractured mandate in 2018. Here are the possible scenarios.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X