• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கழுத்தில் கிடந்த தாலியை விற்று டிவி வாங்கிய கஸ்தூரி.. காரணத்தை கேட்டால் சும்மா அசந்து போயிடுவீங்க!

|

பெங்களூரு: பெண் ஒருவர் தாலியை அடமானம் வைத்து, குழந்தைகளின் கல்விக்காக டிவி வாங்கி தந்துள்ளார்.. இதையடுத்து அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் நாலா பக்கமிருந்தும் குவிந்து கொண்டிருக்கின்றது.

தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது... ஓரளவு தளர்வுகள் ஆங்காங்கே மாநிலங்களில் அமல்படுத்தி வந்தாலும், இன்னும் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை.. கொரோனாவைரசும் முற்றிலுமாக ஒழியவில்லை.

 karnataka woman pawns thaali to buy tv for her kids lessons

அதனால் எப்படியும் ஸ்கூல் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள்.. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.. எல்கேஜி பிள்ளைகளுக்குகூட ஆன்லைன் கிளாஸ்கள் நடத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் கிளாசுக்கு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்தான் அவசியம்.. கிராமப்புறங்களில், தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கஷ்டப்பட்டு ஏழைகள் படிக்க வைத்து வருகின்றனர்... இவர்களுக்கு ஃபீஸ் கட்டுவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில், எல்லார் வீடுகளிலும் ஸ்மார்ட் போன் இருக்குமா? படிக்கிற பிள்ளைகள் கையில் அவைகளை வாங்கி தர பெற்றோரால் முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஸ்மார்ட் போன் இருந்தால்தான் ஆன்லைன் கிளாஸில் பங்கெடுக்க முடியும்.. அப்படி இருக்கும்போது, ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு இந்த கிளாஸ்களில் பலனும் இருக்காது.. அதுமட்டுமில்லை, ஸ்மார்ட் போன் இல்லாத பிள்ளைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விடுகிறது.. சின்ன வயசு பிள்ளைகளால் மற்ற சக நண்பர்களிடம் அவமானமடைவதாக கருதி கொள்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் தற்கொலைகளும் சமீப காலமாக நடந்து வருகின்றன.

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்.. அத்துமீறிய லேப் டெக்னிஷியன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

பஞ்சாப் போன்ற மாநிலங்கள், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கி உதவி செய்து வருகின்றன... இன்னும் சில மாநிலங்களில் டிவி வழியாக பிள்ளைகளுக்கு கிளாஸ்கள் எடுக்கப்படுகின்றன. இந்த டிவி இல்லாததால்கூட, மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.. இதுதொடர்பான விவாதங்களும் தற்போது சூடாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.. இங்கும் டிவி வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது... இதையடுத்து, தன் குழந்தைகள் படிப்பு டிவி இல்லாமல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த பெண் தனது தாலியை அடமானம் வைத்து டிவி வாங்கி உள்ளார்.

அவரது பெயர் கஸ்தூரி.. டிவிக்காக தாலியை அடமானம் வைத்தது குறித்து அவர் சொல்லும்போது, "எங்களை டிவி வாங்கும்படி டீச்சர் வலியுறுத்தினார்... ஆனால், எங்களிடம் அவ்வளவு பண வசதி இல்லை.. டிவிக்காக, குழந்தைங்களை பக்கத்து வீடுகளுக்கு அனுப்பி வெச்சிட்டு இருக்க முடியாது.. அதனாலதான் தாலியை அடமானம் வைத்தேன்.. குழந்தைங்களுக்கு படிப்புதான் முக்கியம்" என்றார்.

  SouthWest Mansoon will continue till september, says IMD

  கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கஸ்தூரியின் இந்த செயல்பாடு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.. பாராட்டுக்களும் இந்த தாய்க்கு குவிந்து வருகின்றன.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  karnataka woman pawns thaali to buy tv for her kids lessons
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X