பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் டிரெண்டானது போல் கர்நாடகத்தில் டிரெண்டான #KarnatakaJobsForKannadigas

Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்று அவர்கள் பற்ற வைத்த நெருப்பு இன்று கர்நாடகத்திலும் டிரெண்டானது.

தமிழ்நாட்டில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான 18 பொதுத் துறை நிறுவனங்களில் 90 முதல் 100 சதவீதம் வரை வெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருவதாக சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்தது.

#KarnatakaJobsForKannadigas is trended in Karnataka

அண்மையில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி அஞ்சல் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும் ரயில்வே துறையில் தொழில் பழகுனர் பணிக்கு 90 சதவீதம் வடமாநில இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனால் தமிழகத்தில் இருந்து அரசு வேலைக்கு தயார் செய்யப்படும் இளைஞர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து #தமிழகவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தனர்.

6 மணி நேரம் தாமதமான ரயில்... பெங்களூருவில் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை 6 மணி நேரம் தாமதமான ரயில்... பெங்களூருவில் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை

இது போன்று நேற்று முன் தினம் டிரென்டான நிலையில் கர்நாடகத்தில் நேற்று #KarnatakaJobsForKannadigas டிரெண்டானது. அந்த மாநில முதல்வர் குமாரசாமியும் இதை வலியுறுத்தி டுவீட் வெளியிட்டுள்ளார்.

English summary
#KarnatakaJobsForKannadigas is trended in Karnataka, as it was trended in Tamilnadu like #TamilnaduJobsForTamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X