பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறந்த ஆட்சி.. கேரளா டாப்.. உ.பி. லாஸ்ட்.. வெளியான சூப்பர் சர்வே.. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: சிறப்பாக ஆட்சி நடைபெறக்கூடிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான பெங்களூரை சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் மையம் நடத்தியுள்ள சர்வே இந்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளது.

முதல் இடத்தைப் பிடித்துள்ள மாநிலங்கள் எவை, கடைசி இடத்தைப் பிடித்துள்ள மாநிலங்கள் எவை என்பதை குறியீட்டு புள்ளிகளுடன் குறிப்பிட்டு கூறியுள்ளது இந்த சர்வே.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி.. குஜராத்தில் கோலாகலம்சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி.. குஜராத்தில் கோலாகலம்

தென் மாநிலங்கள் டாப்

தென் மாநிலங்கள் டாப்

கேரளா, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு தென் மாநிலங்களும் முதல் நான்கு இடத்தை பிடித்து அசத்தியுள்ளன. இதன் மூலம் தென் மாநிலங்களில்தான் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பது புள்ளிவிவர ஆதாரத்தின் மூலம் மற்றொரு முறை நிரூபணமாகியுள்ளது.

தமிழகத்திற்கு புள்ளி

தமிழகத்திற்கு புள்ளி

பட்டியலில் முதல் இடம் இருக்கும் கேரளாவுக்கு 1.388 குறியீட்டு எண் புள்ளிகள் வழங்கப் பட்டுள்ளன. தமிழகம் 0.912 புள்ளிகளை பெற்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் 0.531 புள்ளிகளையும், கர்நாடகா 0.468 புள்ளிகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நான்கு மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி இடம் உத்தர பிரதேசத்திற்கு

கடைசி இடம் உத்தர பிரதேசத்திற்கு

அதே நேரம் கடைசியில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மைனஸ் 1.461 புள்ளி பெற்றுள்ளது உத்தர பிரதேசம். ஒடிசா மாநிலம் மைனஸ் 1.201 புள்ளிகளையும், பிஹார் மாநிலம் -1.158 புள்ளிகளையும் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக இந்த மாநிலங்கள் இந்திய அளவில் பின்தங்கிய பகுதிகளாக இருப்பதும் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.

கோவா டாப்

கோவா டாப்

சிறிய மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால், கோவா சிறப்பான நிர்வாகத்திற்கான பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. 1.74 5 புள்ளிகள் அந்த மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. மேகாலயா 0.7 97 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 0.725 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

சண்டிகர் அருமை

சண்டிகர் அருமை

யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடம் பிடித்துள்ளது. 1.05 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நமது அண்டை பகுதியான புதுச்சேரி 0.52 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், லட்சத்தீவுகள் 0.001 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. தாதர் மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான், ஜம்மு காஷ்மீர் மற்றும் நிக்கோபார் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

English summary
Kerala was adjudged the best governed state in the country while Uttar Pradesh ended at the bottom in the large states category, according to the Public Affairs Index-2020 released by the Public Affairs Centre in Bengaluru on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X