இது என்ன புதுசா?.. கர்நாடகாவில் திடீரென பரவும் KFD வைரஸ்.. ஒருவருக்கு பாதிப்பு.. அறிகுறிகள் என்ன?
பெங்களூர்: கர்நாடகாவில் திடீரென ஒருவருக்கு KFD வைரஸ் எனப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்நாடகாவில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

KFD அல்லது கியாசனூர் ஃபாரஸ்ட் நோய் என்று அழைக்கப்படும் இந்த நோய் கர்நாடகாவில் 1957ல் கண்டறியப்பட்டது. கர்நாடகாவில் இருக்கும் கட்டின்கேரே என்று கிராமம் அருகே இருக்கும் கியாசனூர் காட்டுப்பகுதியில் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
இதனால் அந்த வைரஸ் மூலம் பரவும் நோய்க்கு கியாசனூர் ஃபாரஸ்ட் நோய் அல்லது KFD என்று பெயர் வைக்கப்பட்டது. அங்கு இருக்கும் குரங்குகளுக்கு இடையே இந்த KFD பரவல் முதலில் கண்டறியப்பட்டது.
கர்நாடகா: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மேகதாது அணைக்காக 11 நாள் பாதயாத்திரையை தொடங்கியது காங்.

KFD வைரஸ்
இதனால் இதை குரங்கு நோய் அல்லது குரங்கு காய்ச்சல் என்றும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, ஆப்ரிக்காவில் சில நாடுகளிலும் இதே போன்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு குரங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து இந்த பாதிப்பு மக்களுக்கு பரவியது. தற்போது KFD வைரஸ் எண்டமிக் என்ற நிலையை அடைந்துவிட்டது. அதாவது மனித குலத்தை விட்டு எப்போதும் இருக்கும் ஒரு வைரஸ். அவ்வப்போது வந்து திடீரென தாக்கிவிட்டு சில கேஸ்களை உருவாக்கிவிட்டு பின்னர் மறைந்து.. மறுபடியும் ரிப்பீட்டு என்று மீண்டும் வந்து கேஸ்களை உருவாக்கும்.

கர்நாடகா KFD வைரஸ்
2019ல் கர்நாடகாவில் சிலரை தாக்கிய KFD வைரஸ் மீண்டும் இப்போது அங்கு ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. KFD வைரஸ் என்பது காற்றில் பரவ கூடியது அல்ல. கொரோனா போலவும் இது பரவாது. மாறாக Haemaphysalis spinigera எனப்படும் ஒரு வகை தடித்த பூச்சிகள் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும் இது. இந்த பூச்சிகள் கடிப்பதன் மூலம் ஒருவருக்கும் உடலில் KFD பாதிப்பு ஏற்படும். குரங்குகள், மனிதர்களுக்கு அதிக அளவில் KFD பாதிப்புகள் ஏற்படும்.

கர்நாடகா வைரஸ்
பொதுவாக KFD தாக்கியவர்களுக்கு உடலில் பல இடங்களில் ரத்த போக்கு ஏற்படும். நவ துவாரங்களில் சில இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறுவது கடைசி கட்ட அறிகுறிகள் ஆகும். இது போக தலைவலி, காய்ச்சல், உடல் நடுக்கம், உடல் வலி, வாந்தி எடுப்பது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவையும் KFD வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் ஆகும். 3-4 நாட்களுக்கு அறிகுறிகள் இருக்கும். உடலில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த செல்கள் எண்ணிக்கை குறையும்.

KFD அறிகுறிகள்
சிலருக்கு அதன்பின் ரத்த போக்கு ஏற்படும். சிலருக்கு 2 வாரம் வரை கூட அறிகுறிகள் இருக்கும். இதில் இருந்து குணமடைந்தாலும் 2-3 மாதங்களுக்கு உடலில் அந்த வைரஸின் தாக்கம் இருக்கும். பொதுவாக எலிகள், அணில்கள், பூனைகளில் இந்த வைரஸ் காணப்படும். Haemaphysalis spinigera எனப்படும் ஒரு வகை தடித்த பூச்சுகள் கடித்த விலங்குகளை மனிதர்கள் தொடும் சமயத்தில் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இந்த வைரஸ் பரவாது.

KFD வைரஸ் என்றால் என்ன
இதற்கு ஏற்கனவே வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. மட்டுப்படுத்தப்பட்ட KFD வைரஸ் மூலம் இந்த வேக்சின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் 57 வயது பெண்ணுக்கு இந்த வைரஸ் மீண்டும் தாக்கி உள்ளது. 2019ல் இந்த வைரஸ் அங்கு தாக்கிய நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சந்தேகத்தின் பெயரில் KFD சோதனை செய்துள்ளனர். இதில் அவருக்கு வைரஸ் இருந்தது உறுதியானது.

மீண்டும் பாதிப்பு
அவர் வசிக்கும் ஊர் காட்டுப்பகுதியில் உள்ளது. இதனால் பூச்சி கடி மூலம் வைரஸ் தாக்கி இருக்கலாம். அவரின் ஊரில் மேலும் 50 பேரை சோதனை செய்ததில் யாருக்கும் KFD இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. 2019ல் கர்நாடகாவில் சாகர் தாலுக்காவில் KFD ஏற்பட்டது. அதில் 22 பேர் KFD காரணமாக பலியானார்கள். அதன்பின் 2020 தொடக்கத்தில் 4 பேர் KFD காரணமாக அதே தாலுக்காவில் பலியானார்கள். காய்ச்சல் மற்றும் ரத்த போக்கு ஏற்பட்டு KFD காரணமாக மக்கள் பலியாவது குறிப்பிடத்தக்கது.