பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது பாஜகவுக்கு ஆதரவா?.. நானா?.. ச்சே ச்சே அதெல்லாம் நம்பாதீங்க!.. குமாரசாமி விளக்கம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பாஜகவுக்கு ஆதரவு என்பது அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் அவ்வப்போது நடக்கும் அரசியல் நாடகங்கள் குமாரசாமி ஆட்சியிலும் நடந்து அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவோடு இரவாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து நேற்று முன் தினம் கர்நாடக முதல்வராக 4-ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதிக்குள் எடியூரப்பா பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மஜத தொண்டர்கள்

மஜத தொண்டர்கள்

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு குமாரசாமி ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மஜத தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அடிப்படை ஆதாரமற்றது

இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குமாரசாமி விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக வந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது.

வதந்தி

வதந்தி

பாஜகவுக்கு ஆதரவு என்ற தகவல் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. மஜத எம்எல்ஏக்கள்,கட்சி தொண்டர்கள் இதுபோன்ற வதந்திக்கு செவிசாய்க்க தேவையில்லை.

காங்கிரஸ்- மஜத

காங்கிரஸ்- மஜத

மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கட்சியை லுப்படுத்துவோம். சாமானிய மக்களுக்கான எங்களின் போராட்டம் தொடரும் என குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். இதனால் தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற வியூகம் வகுத்து வருவதால் மஜத தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

English summary
Karnataka EX CM Kumarasamy says in his twitter that he would not extend any support for BJP in trust vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X