பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க போறது கஷ்டமா இருக்குங்க.. . குமாரசாமியையே நெகிழ வைத்த அண்ணாமலை!

பதவி விலகிய அண்ணாமலைக்கு குமாரசாமி ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு காவல்துறை அதிகாரி பதவி விலகுகிறார் அவருக்காக வருத்தப்படும் கர்நாடக முதல்வர்-வீடியோ

    பெங்களூரு: ஒரு காவல்துறை அதிகாரி பதவி விலகியுள்ளார். அதற்காக மாநில முதல்வர் வருத்தப்படுகிறார், ஏமாற்றம் தெரிவிக்கிறார். அப்படியானால் அந்த காவல்துறை அதிகாரி எந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருப்பார் பாருங்கள்.

    அவர்தான் அண்ணாமலை.. கே. அண்ணாமலை. தமிழகத்தின் கரூர் மாவட்டம்தான் இவரது சொந்த ஊர். ஆனால் கடைசியாக பணியில் இருந்தது பெங்களூர் தெற்கு காவல்துறை துணை கமிஷனர். இப்போது தனது பதவியிலிருந்து விலகி விட்டார் அண்ணாமலை.

    அண்ணாமலை பதவி விலகல் கர்நாடக மக்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மட்டுமல்லாமல், கர்நாடக அரசியல்வாதிகளும் கூட அண்ணாமலை விலகலால் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அண்ணாமலைக்கு அங்கு மக்கள் ஆதரவும் அதிகரித்துள்ளதாம்.

    செந்தில்பாலாஜி சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்!செந்தில்பாலாஜி சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்!

    கர்நாடகத்து சிங்கம்

    கர்நாடகத்து சிங்கம்

    கர்நாடகத்தின் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் அண்ணாமலை. சிங்கம் பட சூர்யா போல நேர்மையானவர். எதிரில் நிற்பவர் யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்பவர். ஆனால் தற்போது தனது ஐபிஎஸ் பணியை விட்டு விட்டார்.

    விளையாட போகிறேன்

    விளையாட போகிறேன்

    அவர் அரசியலில் ஈடுபடப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகம் திரும்பிய பின்னர் அவர் கட்சியில் சேரப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதுகுறித்து நான் இப்போது எதையும் முடிவு செய்யவில்லை. எனது மகனுடன் ஜாலியாக விளையாடப் போகிறேன், பொழுதைக் கழிக்கப் போகிறேன். ஆறு மாதம் கழித்துதான் என் முடிவுகள் இருக்கும் என்று கூறுகிறார் அண்ணாமலை.

    ஐபிஎஸ் அதிகாரி

    அண்ணாமலை என்ன முடிவு எடுக்கிறாரோ ஆனால் முதல்வர் குமாரசாமிதான் அண்ணாமலையின் விலகலால் வருத்தமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி தனது அரசுப் பணியை விட்டுள்ளார். அவர் ஒரு நல்ல அதிகாரி. அவர் அரசுப் பணியிலிருந்து விலகியிருப்பது நிர்வாகத்திற்கு இழப்பாகும். இருப்பினும் அவர் தனது எதிர்காலக் காரியங்களிலும், வாழ்க்கையிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் குமாரசாமி.

    மன உறுதி

    மன உறுதி

    அதேபோல ரயில்வே டிஜிபி ரூபா மோட்கில் வெளியிட்டுள்ள டிவீட்டில், அண்ணாமலையிடம் பேசினேன். தனது விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர் அரசியலில் இறங்குகிறார். அதற்கு மிகுந்த தைரியம் தேவை. மிகக் கடினமான முயற்சிகளுக்குப் பிறகு கிடைத்த ஐபிஎஸ் பதவியை விட்டு விலகுவதற்கு மன உறுதி வேண்டும். இதுபோன்ற இளம் சாதனையாளர்கள் அரசியலுக்கு வருவது மகிகழ்ச்சி தருகிறது. அவருக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ரூபா.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    கோவையில்தான் படித்தார் அண்ணாமலை. பிஎஸ்ஜி கல்லூரியில் படித்த பின்னர் லக்னோ ஐஐஎம்மில் படித்தார். அதன் பிறகு ஐபிஎஸ் ஆனார். கர்நாடகத்தில் போஸ்ட்டிங் கிடைத்தது. ஏஎஸ்பி, டிஎஸ்பி, எஸ்பி, துணை கமிஷனர் என பல பதவிகளை வகித்துள்ளார். இவர் திருக்குரான் நன்கு அறிந்தவர். பாபாபுதன்கிரி என்ற ஊரில் கடந்த 2017ம் ஆண்டு மதக் கலவரம் ஏற்பட்டபோது திருக்குரானிலிருந்து பல பகுதிகளைச் சொல்லி இந்து முஸ்லீ்ம் மக்களிடையே ஆச்சரியத்தையும், அமைதியையும் ஏற்படுத்தி அனைவரையும் அசரடித்தவர் அண்ணாமலை. கடந்த ஆண்டுதான் பெங்களூரில் துணை கமிஷனராகப் பொறுப்பேற்றிருந்தார். தற்போது அதற்கு குட்பை சொல்லியுள்ளார்.

    கரூர்காரர்

    கரூர்காரர்

    கர்நாடகத்திற்கு அண்ணாமலை இழப்பாக இருந்தாலும் கூட தமிழக அரசியலுக்கு அவர் வரவிருப்பது நிச்சயம் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிகரமான விஷயம்தான். இவரும் கரூர், ஜோதிமணியும் கரூர். எனவே இன்றைய சூழலில் கரூரிலிருந்து ஆக்கப்பூர்வமான அரசியல் கிளம்பி வருவது உள்ளூர மகிழ்ச்சி தருகிறது.

    English summary
    Kumarasamy says "Annamalai is a good officer and his quitting the service will be a loss to the administration"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X