பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்காது என பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ள எடியூரப்பா, பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏ-க்களின் ஆதரவு குமாரசாமிக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

Kumaraswamy cannot prove majority .. Rule Make sure to overthrow .. Yeddyurappa

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியில், அதிகார போட்டி மற்றும் அமைச்சர் பதவிகள் தரப்படாததை காட்டி ஏராளமான முறை கலக குரல் வெடித்தது. எடியூரப்பா தலைமையிலான பாஜக-வும் ஆபரேஷன் தாமரையை மூன்றுக்கும் மேற்பட்ட முறை கையில் எடுத்தும், வெற்றி காண இயவில்லை.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள் 15க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் ஆனால் அவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை

இதனையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இது தொடர்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று வரை ராஜினமா செய்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையோ அல்லது ராஜினாமா கடிதத்தின் மீது முடிவோ எடுக்க கூடாது என கூறியிருந்தது

கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்! கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சொன்னபடி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

தீர்ப்பில் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவெடுக்க எந்த கால வரையறையும் நிர்ணயிக்க தாங்கள் விரும்பவில்லை என கூறினர் அதே சமயம் ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏ-க்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் விரைவில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். பெரும்பான்மை இல்லாத குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தியுள்ளார்.

English summary
BJP state leader Yeddyurappa says Kumaraswamy-led rule will not extend in Karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X