பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமாரசாமி உட்கார்ந்திருந்த சீட்டை கூட விடவில்லை.. வளைச்சு வளைச்சு ஹெலிகாப்டரில் சோதனை!

குமாரசாமி பயணம் செய்த ஹெலிகாப்டரில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டர் மற்றும் அதில் இருந்த உடமைகளை தேர்தல் அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் 2வது கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் ஷிவமொக்கா தொகுதியில் முதல்வர்கள் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பாவும், எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவும் போட்டியிடுவதால் களம் ஏகப்பட்ட சூட்டில் உள்ளது.

இந்நிலையில், மதுபங்காரப்பாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் மூலம் ஷிவமொக்கா மாவட்டம் வந்தார் குமாரசாமி.

பானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு பானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு

ஹெலிகாப்டர்

அப்போது அவர் வந்து இறங்கிய ஹெலிகாப்டரை உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஓடிவந்து சோதனை செய்தனர். இதற்கு எந்த மறுப்பும் சொல்லாத குமாரசாமி அமைதியாக பார்த்து கொண்டிருந்தார். ஒத்துழைப்பும் தந்தார். கிட்டத்த 20 நிமிஷம் இந்த சோதனை நடந்தது.

அனுமதி

அனுமதி

இதோடு விடாமல், குமாரசாமியுடன் வந்த கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கொண்டு வந்திருந்த பைகள், பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்பிறகுதான ஹெலிகாப்டரை முதல்வர் பயன்படுத்த அனுமதியே வழங்கினார்கள்.

பைகள்

பைகள்

இந்த நிலையில் 2வது முறையாக இன்றும் பிரச்சாரத்துக்கு சென்ற முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த முறை கார்வாரில் சோதனை நடந்தது. குமாரசாமி வந்த ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் குமாரசாமி உட்கார்ந்திருந்த சீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை செய்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

இரண்டு முறை இப்படி சோதனைகளை நடத்தியும்கூட இதுவரை எதையுமே அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை என்றாலும், ஒரு மாநில முதல்வர் வந்த ஹெலிகாப்டரையே இப்படி வளைச்சு வளைச்சு சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
EC officials searched the luggage and checking helicopter traveled by Karnataka CM Kumaraswamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X