பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்படியாவது ஆட்சியில் நீடிக்கணும்பா..ஜோதிடர் சொல்படி தங்கத்தேர் செய்ய உத்தரவிட்ட குமாரசாமி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகத்தில் ரூ.80 கோடி செலவில் குக்கி சுப்ரமண்யா கோவில் தங்கத்தேர் செய்யும் பணியை மீண்டும் துவக்க, அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநித்தில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பல முறை முயன்றார். ஆனால் எல்லா முறையுமே அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது இதனிடையே காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல். ஏ.க்கள் குமாரசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா தீவிரமாக ஈடுபட்டுள்ளார் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை எப்படியாவது அசைத்து பார்த்துவிட வேண்டும் என பாஜக வியூகம் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகனா? உண்மை என்ன? பாஜகவின் குற்றச்சாட்டின் பின்னணி!ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகனா? உண்மை என்ன? பாஜகவின் குற்றச்சாட்டின் பின்னணி!

மிரட்டலும்.. சமாதானமும்

மிரட்டலும்.. சமாதானமும்

அமைசச்ர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கம் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலர் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்தப்படி உள்ளார்கள். ரமேஷ் ஜார்கிகோலி, நாகேந்திரா, மகேஷ் கும்தஹள்ளி, பீம நாயக், காம்ப்ளி கணேஷ் ஆகிய 5 பேரும் அமைச்சர் பதவியை குறிவைத்துள்ளனர்

இதனையடுத்து இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டு ராவ் ஆகியோர் இறங்கியுள்ளனர் சமீபத்தில் இவர்கள் மூவரும் சில அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்கள்.

குமாரசாமியின் ஆன்மீகம்..ஜோதிடர் ஆலோசனை

குமாரசாமியின் ஆன்மீகம்..ஜோதிடர் ஆலோசனை

ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி. கூட்டணி அரசுக்கு ஏற்படும் அரசியல் அபாயங்களை வென்று, அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள ஜோதிடர்கள் அளித்த ஆலோசனைப்படி குக்கி சுப்ரமண்யா கோவில் தங்கத்தேர் செய்யும் பணியை மேற்கொள்ள குமாரசாமி உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குக்கி சுப்ரமண்யா கோயில் மற்றும் தங்கத்தேர்

குக்கி சுப்ரமண்யா கோயில் மற்றும் தங்கத்தேர்

கர்நாடக மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில், குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் குக்கி சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதற்கான திட்ட மதிப்பீடாக அன்றைய தங்க விலை மதிப்பின்படி ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசின் நிதி உதவி பெறாமல் பக்தர்களின் பங்களிப்பு மற்றும் காணிக்கையை கொண்டு, தங்கத்தேர் செய்யும் திட்டம் நடைபெற்று வந்தது. இடையில் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையால் தங்கத்தேர் செய்யும் பணி பாதியிலேயே நின்று போனது.

மீண்டும் துவங்கிய பணி..எதிர்கட்சிகளின் விமர்சனம்

மீண்டும் துவங்கிய பணி..எதிர்கட்சிகளின் விமர்சனம்

14 ஆண்டுகளுக்கு பின்னர் குக்கி சுப்ரமண்யா கோவில் தங்கத்தேர் செய்யும் பணி மீண்டும் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தங்கத்தேர் செய்யும் பணியை மீண்டும் துவக்கினால், நினைத்தது நிச்சயம் நிறைவேறும் என குமாரசாமிக்கு அவரது ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை வழங்கியுள்ளார்

இதனையடுத்து ஆட்சியை தக்கவைக்க 14 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கோயில் திருப்பணியை துவக்க கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கருத்து தெரிவித்த பாரதிய ஜனதவை சேர்ந்த ஷோபா கண்டல்ஜே, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி அரசை கடவுள் காப்பாற்ற மாட்டார் என விமர்சித்துள்ளார்.

English summary
Karnataka Chief Minister kumarasamy ordered Make Golden Chariot for kukee subramnya temple at cost Rs.80 crores
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X