பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு

Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தியாவின் புதிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக பெங்களூர் மற்றும் புனே மாறுவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்பு, மும்பை, சென்னை நகரங்கள் இப்படி ஹாட்ஸ்பாட்டாக இருந்தன. ஹாட்ஸ்பாட்டாக இருந்த மற்றொரு நகரம் டெல்லி. இங்கெல்லாம் இப்போது ஓரளவுக்கு பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பெங்களூர் மற்றும் புனே நகரங்களில் கொரோனா வேகமாக பரவுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க, லாக்டவுனில் பல தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதன்பிறகு, பல மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்துள்ளன.

செப்டம்பர் 3ம் தேதி இந்தியா 9.86 லட்சம் கொரோனா கேஸ்களை பதிவு செய்யக்கூடும் என்று சில டிரெண்ட் கணிப்புகள் எச்சரிக்கின்றன.
'டைம்ஸ் பேக்ட்-இந்தியா தொற்றுநோய் அறிக்கை' இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இப்படியே போச்சுன்னா 30 லட்சம் கொரோனா பாதிப்பை இந்தியா சந்திக்கும்.. ப.சிதம்பரம் இப்படியே போச்சுன்னா 30 லட்சம் கொரோனா பாதிப்பை இந்தியா சந்திக்கும்.. ப.சிதம்பரம்

நவம்பரில் மிக அதிகரிப்பு

நவம்பரில் மிக அதிகரிப்பு

அந்த அறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்கள்: நவம்பர் 17ம் தேதிக்குள் தினசரி கேஸ்கள் எண்ணிக்கை குறையும். இதன் மூலம கொரோனாவிலிருந்து மெல்ல இந்தியா வெளியே வரத் தொடங்கும். முன்பு அக்டோபர் மாதத்தில், இந்த உச்சநிலை இருக்கும். பிறகு குறையும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

பெங்களூர், புனே

பெங்களூர், புனே

மும்பை மோசமான அளவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், புதிய ஹாட்ஸ்பாட்டாக பெங்களூர் மற்றும் புனே நகரங்கள் மாறுகிறது. கேரளா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களை தவிர பிற பெரிய மாநிலங்களில் இன்னும், கொரோனா கேஸ்களில் அதிகரிப்பு உள்ளது. தென் மாநிலங்களில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில், பாதிப்பு பரவல் அதிகமாக உள்ளது.

பரப்பும் வேகம்

பரப்பும் வேகம்

சென்னை, பெங்களூர், தானே மற்றும் புனே ஆகியவை, கொரோனா பரவலில் 1.9 என்ற ரீபுரொடொக்ஷன் அளவில் உள்ளன. பிற பெரிய நகரங்களில் இது 1.6 சதவீதத்திற்கு மேல் இருந்தபோதிலும், அங்கெல்லாம் குறையத் தொடங்கியுள்ளது. ஒரு நபரிடமிருந்து எத்தனை பேருக்கு வைரஸ் பரப்பப்படுகிறது என்பதை வைத்து, இந்த புள்ளிக் கணக்கு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா, ஆந்திரா

கர்நாடகா, ஆந்திரா

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், கொரோனா கேஸ் இரட்டிப்பு விகிதம் என்பது, முறையே, 10 மற்றும் 12 நாட்கள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவின் 31 ஆக்டிவ் கேஸ்களில் 31 சதவீதம் மகராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. ஆனால், அங்கு, 3 சதவீதம் என்ற அளவுக்கு கேஸ் விகிதம் அதிகரிப்பு உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர்

சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லியில் இன்று நடைபெற்ற, கொரோனா தடுப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனை குழு கூட்டத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், மொத்த ஆக்டிவ் கேஸ்களில் 0.28% நோயாளிகள் மட்டுமே வென்டிலேட்டர்களிலும், 1.61% ஐசியு வார்டுகளிலும், 2.32% ஆக்சிஜன் சப்ளையிலும் உள்ளனர். இந்தியாவில், கொரோனா மீட்பு விகிதம் 64.54% என்ற அளவில் உள்ளது. புனே, தானே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நோய் பரவல் மற்றும் சிகிச்சைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது. இவ்வாறு ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.

English summary
While Mumbai has put the worst behind, the new COVID-19 hotspots are Bengaluru and Pune, says Times Fact-India Outbreak Report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X