பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுமலதா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக, சுமலதா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அன்பு நண்பர்களே , கடந்த சனிக்கிழமை (ஜூலை 4ம் தேதி), எனக்கு தலைவலியும், தொண்டை வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் ஏற்பட்டது. எனது தொகுதியில் கொரோனா பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தியதால் ஒரு வேளை பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்று நினைத்த நான், உடனே கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

lok sabha mp Sumalatha Ambareesh tests positive for coronavirus

இன்று சோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில், எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. . மிக மிக குறைவான அறிகுறிகள் மற்றும் பாதிப்பு மட்டுமே எனக்கு உள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, வீட்டிலேயே நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

கடவுளின் ஆசிர்வாதத்தால், எனது நோய் எதிர்ப்பு சக்திகள் வலுவாக உள்ளன. உங்களின் ஆசியால் விரைவில் இந்த பாதிப்பிலிருந்து நலம் பெறுவேன். நான் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு , கடைசியாக சந்தித்த நபர்களின் விவரங்களை வழங்கியுள்ளேன்.

தமிழகம் முழுக்க.. ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா.. பாதிப்பு குறைந்தாலும், அதிகரித்த பலி எண்ணிக்கைதமிழகம் முழுக்க.. ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா.. பாதிப்பு குறைந்தாலும், அதிகரித்த பலி எண்ணிக்கை

என்னை கடைசியாக நேரில் சந்தித்து பேசிய நபர்களே, உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்

சுமலதா, கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான அம்பரீஷின் மனைவி ஆவார். கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரை தோற்கடித்து எம்பியாக உள்ளார்.

English summary
loksabha mp Sumalatha Ambareesh tests positive for coronavirus. who has tested positive for coronavirus, is under self-quarantine at her home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X