பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி!

ஹாரங்கி அணையில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது

Google Oneindia Tamil News

பெங்களூரு: நாளெல்லாம் அளவுக்கு மீறி ஜாலியாக இருந்தது அந்த காதல் ஜோடி.. புன்னகை மன்னன் படத்தில் வருவதுபோல, மொத்த இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு.. கடைசியில் நீர்த்தேக்க பகுதியில் இருந்து குதித்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டது!

மைசூர் மாவட்டம் யமகும்பா பகுதியை சேர்ந்தவர் சிந்துஸ்ரீ.. இவர் சச்சின் என்பவரை காதலித்தார்.. இருவரும் ஒரே ஊர்தான்.. ஆனால் சிந்து வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

lovers committed suicide in harangi dam

அதனால் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்தனர்.. அதன்படி நேற்றுதான் திருமணம் நடப்பதாக இருந்தது.. அதற்கான ஏற்பாடுகளும் செய்து, ஊரெல்லாம் பத்திரிகை தந்தாயிற்று.

இதனால் விஷயத்தை சச்சினுக்கு சொல்லினார் சிந்து.. கண்டிப்பாக இவர்கள் நமக்கு கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள், அதனால் இறந்து விடலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.. இதையடுத்து காதலர் தினத்தன்று குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு இருவரும் சென்றனர்.. அந்த பகுதி முழுவதும் ஜாலியாக சுற்றி பார்த்தனர்.

அளவுக்கு மீறி நாள் முழுவதும் சந்தோஷமாக இருந்தனர்.. இறுதியில் நீர்தேக்க பகுதியில் நின்று கொண்டு இருவரும் ஜோடியாக குதித்துவிட்டனர். இதை பார்த்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் உடனடியாக தீயணைப்பு துறை, போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.. விரைந்து வந்த அவர்கள் இருவரின் சடலத்தை தேடியும் உடனடியாக கிடைக்கவில்லை.

ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு சடலங்கள் மீட்கப்பட்டன.. இரு குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. இரு சடலங்களையும் கட்டிப்பிடிதது கொண்டு இரு குடும்பதாரும் கதறி அழுதனர்.. உடல்கள் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. டேமை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இந்த சம்பத்தினால் நிலைகுலைந்து போயினர்.. இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.

English summary
lovers committed suicide in harangi dam due to love failure near mysore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X