பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் 7 புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து 10 அமைச்சர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி 7 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு இதுவரை இலாகாக்கள் எதுவும் ஒதுக்கப்படாத நிலையில் இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Major cabinet reshuffle in Karnataka as new ministers allocated portfolios

அதன்படி புதிய கர்நாடக அமைச்சர்களின் இலாகாக்கள் பின்வருமாறு;

  • உமேஷ்கட்டி -உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம்
  • அரவிந்த் லிம்பாவளி -வனத்துறை
  • முருகேஷ் நிரானி- கனிமவளத்துறை
  • அங்கார் -மீன்வளத்துறை மற்றும் துறைமுகங்கள் துறை
  • சி.பி.யோகேஷ்வர் -நீர் பாசனத்துறை
  • நாகராஜ் -கலால்
  • சங்கர் -நகராட்சி நிர்வாகம்
  • இதேபோல் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களின் விவரம் பின்வருமாறு;
  • பசவராஜ் பொம்மை -காவல்; சட்டம்; சட்டசபை
  • மாதுசாமி -மருத்துவக் கல்வித்துறை மற்றும் கன்னட கலாச்சாரம்
  • சி.சி.பட்டீல் -செய்தி தொடர்புத்துறை
  • கோட்டா சீனிவாச பூஜாரி -இந்து சமய அறநிலையத்துறை
  • சுதாகர் -சுகாதாரம்
  • ஆனந்த் சிங் -சுற்றுலா
  • சிவராம் ஹெப்பார் -தொழிலாளர் நலன்
  • கோபாலய்யா -தோட்டக்கலைத்துறை
  • நாராயணகவுடா - இளைஞர் நலன் மற்றும் வக்பு வாரியம்
  • பிரபு சவான் -கால்நடைத்துறை

இதனிடையே முதலமைச்சர் எடியூரப்பா வசம் மின்சாரம், நிர்வாக சீர்திருத்தம், பெங்களூரு நகர வளர்ச்சி, உளவுத்துறை, உள்ளிட்ட அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத அனைத்து துறைகளும் இருக்கின்றன.

English summary
Major cabinet reshuffle in Karnataka as new ministers allocated portfolios
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X