Just In
கர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..!
பெங்களூரு: கர்நாடகாவில் 7 புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து 10 அமைச்சர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி 7 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு இதுவரை இலாகாக்கள் எதுவும் ஒதுக்கப்படாத நிலையில் இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி புதிய கர்நாடக அமைச்சர்களின் இலாகாக்கள் பின்வருமாறு;
- உமேஷ்கட்டி -உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம்
- அரவிந்த் லிம்பாவளி -வனத்துறை
- முருகேஷ் நிரானி- கனிமவளத்துறை
- அங்கார் -மீன்வளத்துறை மற்றும் துறைமுகங்கள் துறை
- சி.பி.யோகேஷ்வர் -நீர் பாசனத்துறை
- நாகராஜ் -கலால்
- சங்கர் -நகராட்சி நிர்வாகம்
- இதேபோல் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களின் விவரம் பின்வருமாறு;
- பசவராஜ் பொம்மை -காவல்; சட்டம்; சட்டசபை
- மாதுசாமி -மருத்துவக் கல்வித்துறை மற்றும் கன்னட கலாச்சாரம்
- சி.சி.பட்டீல் -செய்தி தொடர்புத்துறை
- கோட்டா சீனிவாச பூஜாரி -இந்து சமய அறநிலையத்துறை
- சுதாகர் -சுகாதாரம்
- ஆனந்த் சிங் -சுற்றுலா
- சிவராம் ஹெப்பார் -தொழிலாளர் நலன்
- கோபாலய்யா -தோட்டக்கலைத்துறை
- நாராயணகவுடா - இளைஞர் நலன் மற்றும் வக்பு வாரியம்
- பிரபு சவான் -கால்நடைத்துறை
இதனிடையே முதலமைச்சர் எடியூரப்பா வசம் மின்சாரம், நிர்வாக சீர்திருத்தம், பெங்களூரு நகர வளர்ச்சி, உளவுத்துறை, உள்ளிட்ட அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத அனைத்து துறைகளும் இருக்கின்றன.