• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சித்தார்த் மறைவுக்கு பிறகு.. கலங்கிய காபி டே ஊழியர்களை கடிதம் எழுதி தேற்றிய மாளவிகா! சொன்னபடி சாதனை!

By
Google Oneindia Tamil News

பெங்களூர்: காபி டே நிறுவனத்துக்கு பொறுப்பேற்பதற்கு முன், உருக்கமான‌ கடிதத்தை ஊழியர்களுக்கு எழுதி இருந்தார் மாளவிகா ஹெக்டே. கடன்களை அடைத்து, தற்போது சொன்னதை செய்துகாட்டி சாதித்திருக்கிறார் மாளவிகா ஹெக்டே.

  பாதியாக குறைந்த கடன்.. Café Coffee Day-வை மீட்டு எடுக்கும் Siddhartha-வின் மனைவி | Oneindia Tamil

  கஃபே காபி டே நிறுவனத்தை நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக்கூடும். பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடக்கூடிய நிறுவனமாக காபி டே-வை வளர்த்தெடுத்தார் அதன் தலைவர் சித்தார்த்.

  முன்னாள் கர்நாடக மாநில முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்ற அடையாளம் தாண்டி, தனக்கென ஒரு இடத்தை எட்டிப் பிடித்தார் சித்தார்த். காபி உற்பத்தியில் 140 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்து, இந்தியா, ஆஸ்திரியா, செக் குடியரசு, மலேசியா, எகிப்து, நேபாளம் என உலகின் பல நாடுகளில் காபி டே-யின் கிளையைக் கொண்டுவந்தார்.

   உ.பி தேர்தல்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற பாஜக போடும் பிளான்.. ஒர்க் அவுட் ஆகுமா?? உ.பி தேர்தல்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற பாஜக போடும் பிளான்.. ஒர்க் அவுட் ஆகுமா??

   சித்தார்த்

  சித்தார்த்

  காபி உற்பத்தியைத் தாண்டி தொழில்நுட்ப துறையிலும் காலடி எடுத்துவைத்தார் சித்தார்த். காபி டே குளோபல் லிமிடெட் கம்பெனி, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காபி எஸ்டேட்டுகளை சொந்தமாகக் கொண்டிருக்கிறது. ஆசிய கண்டத்திலேயே அரபிகா பீன்ஸ் காபி உற்பத்தியில் சித்தார்த்தின் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.

   கடன் தொல்லை

  கடன் தொல்லை

  நன்றாக சென்று கொண்டிருந்த காபி டே நிறுவனம் தொழில் போட்டிகளால் தொடர் நஷ்டத்துக்கு வந்த‌து. பங்குகளும் பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து நிறுவனத்தின் பேரில் கடன்வாங்கினார். கடனைக் கட்ட முடியாததால், கடனுக்கு கடன் வாங்கி, காபி டே பெயரில் கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார் சித்தார்த்.

   தற்கொலை

  தற்கொலை

  "37 ஆண்டுகால கடுமையான உழைப்பின் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கினேன். இருப்பினும் ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன்'' என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் சித்தார்த். இதனால், காபி டே நிறுவனம் ஸ்தம்பித்துப் போனது. அவரது குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்றே தெரியாத கையறு நிலையில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே.

   தள்ளாடிய நிறுவனம்

  தள்ளாடிய நிறுவனம்

  ஒரு பக்கம் கடன், ஒரு பக்கம் நிறுவனரின் தற்கொலை என காபி டே நிறுவனம் தள்ளாடியது. சித்தார்த்தை சகாப்தம் என்று உச்சி முகர்ந்தனர் ஊழியர்கள். ஆனால், கடன் கட்டாமல் போனால், நிறுவனம் திவாலாகிவிடும் என்ற நேரத்தில், நிறுவனத்தில் தலைமை பொறுப்புக்கு வந்தார் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே. 7000 ஆயிரம் கோடி கடன் கட்ட வேண்டும், குழப்பத்தில் இருக்கும் ஊழியர்களை ஒருங்கிணைக்க வேண்டும், கணவர் மற்றும் குடும்பத்தின் பெயரை சரிசெய்ய வேண்டும். காபி டே நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பொறுப்பேற்கும்போது மாளவிகாவின் முன் இருந்த சவால்கள் இதெல்லாம். இதையெல்லாம் மனதில் வைத்து ஊழியர்களுக்கு கடிதம் எழுதினார் மாளவிகா.

   25000 ஊழியர்கள்

  25000 ஊழியர்கள்

  இக்கட்டான சூழலில் இருக்கும் நிறுவனத்தை எப்படியாவது நாம் மீட்டெடுப்போம் என காபி டே-யின் 250000 ஊழியர்களுக்கும் கடிதம் எழுதினார் மாளவிகா. அவரின் கடிதம் ஊழியர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. இழந்த நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என மாளவிகா சொன்னதை நிரூபிக்க உழைக்கத் தயாரானார்கள் ஊழியர்கள்.

  சவால்கள்

  சவால்கள்

  2020 ஜூலை மாதம் அதாவது தனது கணவர் தற்கொலை செய்த ஓராண்டு கழித்து, இந்த கடிதத்தை எழுதியிருந்தார். நம் கண்முன் இருக்கும் சவால்களை உடைத்தெறிவோம். ஒரு துறை மட்டுமல்லாது, சித்தார்த் சாதித்ததுபோல பல துறைகளில் நாம் சாதிப்போம். நமக்கிருக்கும் கடன் சுமைகளில் இருந்து சீக்கிரம் மீள்வோம். இந்தியாவில் 1000 நகரங்களில் நமது காபி டே இருக்கிறது, அங்கெல்லாம் விரைவில் மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

  எனக்கு சித்தார்த்தை 32 வருடங்களாகத் தெரியும். அவரின் உலகம் இந்த காபி டே தான், அவரின் குடும்பம் நீங்கள் தான் என உருக்கமான கடிதத்தை ஊழியர்களுக்கு எழுதினார். கடிதத்தில் சொன்னதுபோலவே, இன்று காபி டே நிறுவனத்துக்கு இருக்கும் 7 ஆயிரம் கோடி கடனில் பாதிக்கும் மேலான கடன்களை, தான், தலைமையேற்ற ஒரே வருடத்தில் செலுத்தி இருக்கிறார். இழந்த பாரம்பர்யத்தை மீட்டெடுத்து, சித்தார்த்துக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார் மாளவிகா ஹெக்டே.

  English summary
  Coffee Day Malvaika Hegde: Before taking charge of Coffee Day, Malvaika Hegde had written a heartfelt letter to the staff. Malavika Hegde has paid off her debts and done what she was told.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  Desktop Bottom Promotion