பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.." வைரலாகும் ஒற்றை புகைப்படம்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆன்லைன் மூலம் படிக்கும் தனது மகள் நனையாமல் இருக்க அவரது தந்தை குடைப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையிலிருந்து இந்த ஆண்டு 2ஆவது அலை வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்பில் படிக்க பலருக்கு போன் இல்லை, இணையம் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை. இத்தனையையும் கடந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார்கள்.

'டெய்லி 4 மணிநேரம் ஆன்லைன் கிளாஸ்.. என்னால முடியல'.. மோடியிடம் மழலைமொழியில் முறையிட்ட 6 வயசு பிஞ்சு 'டெய்லி 4 மணிநேரம் ஆன்லைன் கிளாஸ்.. என்னால முடியல'.. மோடியிடம் மழலைமொழியில் முறையிட்ட 6 வயசு பிஞ்சு

தட்சிண கன்னட மாவட்டம்

தட்சிண கன்னட மாவட்டம்

அந்த வகையில் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தனது வீட்டில் ஆன்லைன் வகுப்பை கவனிக்க நெட் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் தினந்தோறும் சாலையில் அமர்ந்து படித்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பின் போது மழை கொட்டியது.

மழையில் நனைதல்

மழையில் நனைதல்

தனது மகள் மழையில் நனைவதை கண்ட அவரது தந்தை ஓடி வந்து குடை பிடித்தார். இந்த ஒற்றை புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனது மகளின் படிப்பு கெடாத வண்ணம் மழையில் நனையாத வகையில் குடைபிடித்தபடி நீண்ட நேரம் நின்றிருந்த தந்தையை பாராட்டி வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்பு

தொலைதூர கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படிக்க எத்தனை கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்பதை அறிய இந்த ஒற்றை புகைப்படமே சான்றாகும். அந்த மாவட்டத்தில் சுல்லியா தாலுக்காவில் பலாக்கா கிராமத்தில் இணையதளம் சிக்னல் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

பிஎஸ்என்எல் நெட்

பிஎஸ்என்எல் நெட்

இணையதள சிக்னல் கிடைப்பதற்காக கிராமத்தினர் சிக்னல் கிடைக்கும் இடங்களுக்கு செல்வதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கூறுகையில், பலாக்கா கிராமத்தில் பிஎஸ்என்எல் நெட் சிக்னல் எடுப்பதில்லை.

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை

இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்காக 30 முதல் 40 மாணவர்கள் வரை சிக்னல் கிடைக்கும் இடத்தில் குழுமி வகுப்புகளை கவனித்து வருகிறார்கள். தென்மேற்கு பருவமழையின் போதும் காலை 9 மணிக்கு வருவோம், 1 மணி வரை பாடம் கவனித்துவிட்டு பின்னர் 2 மணிக்கு மதிய உணவுக்கு சென்றுவிட்டு மீண்டும் வருவோம் என்றனர்.

English summary
Father hold umbrella to protect his daughter who was attending online class when it was raining.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X