பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூர்ல கேட்டது இதே பயங்கர சத்தம்தான்.. ஆடியோவோட இந்தா, வந்துட்டாங்கல்ல நெட்டிசன்ஸ்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரில் இன்று பிற்பகல் திடீரென ஒரு சில வினாடிகள் வானிலிருந்து தோன்றிய பெரும் சப்தம், மக்களை பீதிக்குள்ளாக்கியது. மிராஜ் விமானம் இயங்கவில்லை என எச்.ஏ.எல் அமைப்பு அறிவித்துவிட்டது. பூகம்பம் இல்லை என பேரிடர் அமைப்பு கூறிவிட்டது.

எனவே, மக்கள் என்ன நடந்தது என புரியாமல் இருக்கிறார்கள். வளி மண்டல வெடிப்புதான் இதற்கு காரணம் என்று வானிலை இலாகா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் பல மீம்ஸ்கள் தெறியாக பறக்கின்றன.

வேடிக்கையாகவும், சிலர் வேதனையாகவும், இதுபோன்ற மீம்ஸ்களை, சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளனர். அதுகுறித்து பாருங்கள்.

பகல் கொள்ளை.. 14 நாள் பரிதாபம்.. இதை பார்த்த பிறகும் பெங்களூர் போக ஆசைப்படுவீங்களா தமிழக மக்களே?பகல் கொள்ளை.. 14 நாள் பரிதாபம்.. இதை பார்த்த பிறகும் பெங்களூர் போக ஆசைப்படுவீங்களா தமிழக மக்களே?

சவுண்டை பாருங்க

இதே சத்தம்தான், உண்மையில் மக்கள் உணர்ந்தனர். அதையே ஆடியோ பதிவாக வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன். ஒன்னும் இல்ல. 2020வது வருடத்தில் பாதி வீணாக போய்விட்டது, அந்த சத்தம்தான் இது என விரக்தியோடு குறிப்பிட்டுள்ளார்.

காதுக்கு மாஸ்க்

எல்லா ஊரிலும் முகத்தில் மாஸ்க் அணிந்தால், பெங்களூரில் இன்று காதில் மாஸ்க் அணியும் நிலைமை வந்துவிட்டது என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்தான். அந்த அளவுக்கு சத்தம் வந்ததாம்.

BANGகளூர்

இன்று பெங்களூர் என்பது BANGalore என்று மாறிவிட்டது என கூறுகிறார் இந்த நெட்டிசன். BANG என்பதை பேங் என்று பொருள்பட அவர் குறிப்பிட்டுள்ளார். மோதுதல் என இதை எடுத்துக்கொள்ளலாம்.

டிக் மார்க்

பல வகை காரணங்களை பெங்களூர் மக்கள் நினைத்து குழம்பியுள்ளனர். அதனால் இப்படி டிக் மார்க் போட்டு வைத்துவிட்டால் மறக்காது பாருங்க. அதான் இந்த ஏற்பாடு.

ஏலியன் தியேரி

ஏலியன் பூமிக்கு வந்திருக்க கூடும், அந்த சத்தம்தான் அது. ஒருவேளை, கொரோனா வைரசுக்கு மருந்து தர ஏலியன்கள் பூமிக்கு இறங்கி வந்திருக்க கூடும் என்றும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

English summary
Many netizens troll Bangalore boom sound with their memes, which is become national trend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X