பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி எல்லாமா நடக்கும்? குஜராத்தில் இருந்து பீகார் போக வேண்டிய ரயில் கர்நாடகாவுக்கு வந்துச்சாமே

Google Oneindia Tamil News

பெங்களூரு: குஜராத்தில் இருந்து இடம்பெயர் தொழிலாளர்களுடன் பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் வழித்தடம் மாறி கர்நாடகாவுக்கு வந்தடைந்தது என்றும் இதேபோல் 4 ரயில்கள் வழித்தடங்கள் மாறி பல நாட்கள் பயணித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை! கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை!

இடம்பெயர் தொழிலாளர் சிறப்பு ரயில்கள்

இடம்பெயர் தொழிலாளர் சிறப்பு ரயில்கள்

மாநில அரசுகளின் ஏற்பாட்டிலேயே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது சிறப்பு ரயில்கள் குறித்தும் சர்ச்சைகள் உருவாகி உள்ளன. அதாவது சிறப்பு ரயில்கள் வழித்தடம் மாறி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெக்கான் ஹெரால்டு ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகாவுக்கு ரயில்

கர்நாடகாவுக்கு ரயில்

குஜராத்தில் இருந்து பீகார் நோக்கி செல்ல வேண்டிய சிறப்பு ரயில் கர்நாடகா வந்தடைந்தது; சூரத்தில் இருந்து பீகார் செல்ல வேண்டிய மற்றொரு ரயில் ஒடிஷாவின் ரூர்கேலாவுக்கு சென்றது; பாட்னாவுக்கு செல்ல வேண்டிய இரண்டு ரயில்கள் மேற்கு வங்கத்தின் புரூலியாவுக்கும் கயாவுக்கும் போனது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இப்படிதான் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன.

பெங்களூரு ரயில்

பெங்களூரு ரயில்

மே 16-ந் தேதியன்று குஜராத்தின் சூரத் நகரில் இருந்து சிறப்பு ரயில் ஒன்று பீகாரின் சப்ரா நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் சப்ரா நகரை மே 18-ந் தேதி சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் பெங்களூருவுக்கு வந்துவிட்டது. பின்னர் ஒருவழியாக பெங்களூருவில் இருந்து சப்ராவுக்கு மே 25-ந் தேதிதான் இந்த ரயில் சென்றடைந்திருக்கிறது. 9 நாட்கள் இடம்பெயர் தொழிலாளர்கள் கடும் கோடையில் ரயிலிலேயே பயணித்திருக்கின்றனர்.

Recommended Video

    தந்தையுடன் 1200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு குவியும் பாராட்டு | Oneindia Tamil
    குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்தால் ஓகே

    குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்தால் ஓகே

    இந்த சிறப்பு ரயில்களைப் பொறுத்தவரை எந்த பாதையில் பயணிக்கிறோம் என்பதைவிட குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்துவிட்டதா? என்பதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் இப்படியான வழித்தட மாற்றங்கள் எனும் பிரச்சனை நிகழ்ந்திருக்கிறது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். எல்லாம் கொரோனா லாக்டவுன் காலம்!

    English summary
    According to the news paper reprots, one of the Migrant workers special train for Bihar reached Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X