பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரு: எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி வீடு சூறை- வாகனங்கள் தீக்கிரை- துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

Google Oneindia Tamil News

பெங்களூரு: இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை பெங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த விவகாரம் வன்முறையாக வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீடு தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இந்த வன்முறைகளைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    பெங்களூர் கலவரத்திற்கு இடையிலும் கோவிலுக்கு பாதுகாப்பு கொடுத்த இஸ்லாமியர்கள்

    கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி. இவரது உறவினர் நவீன் என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்து ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.

    Mob torch Congress MLA Srinivas Mmurthys house in Bengaluru over social media post

    இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர், வடக்கு பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரது உறவினர் நவீனை கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது திடீரென சீனிவாசமூர்த்தியின் வீடு மீது சரமாரி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

    சீனிவாசமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டிருக்கின்றன. அத்துடன் வீட்டுக்கு வெளியே இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    இதே குழுவினரால் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு வெளியே நிறுதப்பட்டிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பெங்களூரு நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    இதனிடையே பொதுமக்கள் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

    இச்சம்பவங்கள் தொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும். அதற்காக வன்முறையாட்டம் ஒரு தீர்வு அல்ல. வன்முறையில் ஈடுபடுவோரை ஒடுக்க கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்படுவர் என எச்சரித்திருக்கிறார்.

    போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

    இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

    English summary
    A group of miscreants torched the house of a Congress MLA from Pulikeshinagar Akhanda Srinivas Mmurthy over Social Media Post issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X