பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி மிரட்டலைத் தொடர்ந்துதான் அபிநந்தன் விடுவிக்கப்பட்டாராம்.. எடியூரப்பா சொல்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி மிரட்டலால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார் : எடியூரப்பா- வீடியோ

    பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியின் எச்சரிக்கையைத் தொடர்ந்துதான் அபிநந்தன் விடுதலையை பாகிஸ்தான் அறிவித்ததாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

    அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே நமது வீரரை விடுவிக்க பாகிஸ்தான் முன் வந்ததாகவும் எடியூரப்பா கூறியுள்ளார்.

    Modi warned Pakistan, says Yeddyurappa

    பெங்களூரில் நடந்த பாஜக கட்சியினரிடையே பேசுகையில் இவ்வாறு கூறினார் எடியூரப்பா. அவர் பேசுகையில், நமது பெருமைக்குரிய விமானி அபிநந்தன் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அவரது தீரம் பாராட்டப்பட வேண்டும். அவர் பாராசூட் மூலம் பாகிஸ்தானுக்குள் இறங்கியதும் தன்னிடமிருந்த ரகசிய ஆவணங்களை விழுங்கியுள்ளார். அவை எதிரிகளின் கையில் சிக்கிவிடாமல் தடுத்து விட்டார். இதுதான் உண்மையான தேசபக்தி. ஒரு தேசபக்தர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

    பிரதமர் மோடியின் தந்திரங்கள், உபாயங்கள் பாகிஸ்தானை உலக அளவில் அம்பலப்படுத்தி விட்டது. இன்று அது தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. சீனா கூட பாகிஸ்தானை இப்போது ஆதரிக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் நமது பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானுக்குள் ஊடுருவித் தாக்கியது இதுவே முதல் முறையாகும்.

    தங்களுக்கே எதிராக மாறியதால், அபிநந்தன் வீடியோக்களை அவசரமாக அகற்றிய பாகிஸ்தான் தங்களுக்கே எதிராக மாறியதால், அபிநந்தன் வீடியோக்களை அவசரமாக அகற்றிய பாகிஸ்தான்

    அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நமது பிரதமர் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே பாகிஸ்தான் பணிந்தது என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

    English summary
    Senior Karnataka BJP leader Yeddyurappa has said that only after the stern warning from PM Modi Pakistan decided to release our IAF pilot Abhinandan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X