பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவில் நடந்த விபரீதம்!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெங்களூரில் பெண்கள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

பெங்களூர்: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெங்களூரில் பெண்கள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக எம்ஜி ரோட் மற்றும் பிரிகேட் பகுதிகளில் பெண்கள் அதிக அளவில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தற்போது புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் நாடு முழுக்க நேற்று இரவு பெரிய அளவில் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய பெரு நகரங்களில் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல இடங்களில் நிறைய அசம்பாவிதங்கள் நடந்துள்ளது.

 உற்சாக மிகுதி.. சர்ரு புர்ருன்ணு அதிவேகத்தில் அலப்பறை.. 100 பைக்குகள் பறித்தது சென்னை போலீஸ் உற்சாக மிகுதி.. சர்ரு புர்ருன்ணு அதிவேகத்தில் அலப்பறை.. 100 பைக்குகள் பறித்தது சென்னை போலீஸ்

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெங்களூரில் பெண்கள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எப்போதும் பெங்களூரின் எம்ஜி ரோட் பகுதியில் பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும். அங்கு அதிக அளவில் பெண்கள், ஆண்கள் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுவார்கள்.

பெண்கள்

பெண்கள்

இந்த நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். நேற்று வந்த புகாரின் அடிப்படையில் மட்டும் 25 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். சாலையில் நடக்கும் போது பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.

எங்கு எப்படி

எங்கு எப்படி

முக்கியமாக எம்ஜி ரோட் மற்றும் பிரிகேட் பகுதிகளில் பெண்கள் அதிக அளவில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் இந்திரா நகர் பகுதியில் அதிக அளவில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளனர். பெங்களூரின் இந்திரா நகர் பகுதியில் அதிக அளவில் மதுபான கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கு போடப்பட்டுள்ளது

வழக்கு போடப்பட்டுள்ளது

இந்த புகார்கள் தொடர்பாக நேற்றே நிறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முழுக்க நடமாடும் போலீஸ் மையங்கள் அமைக்கப்பட்டு, இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டனர்.

English summary
More than 20 got molested in Banglore during New Year yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X