பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடியூரப்பா விலகினால்.. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் முருகேஷ் ஆர் நிரானி?

Google Oneindia Tamil News

பெங்களூரு : கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவை பதவியில் இருந்து விலகுமாறு கட்சி தலைமை நிர்பந்தம் செய்துவருவதாக சொல்லப்படுகிறது. அவர் பதவி விலகினால் புதிய முதல்வராக யார் பொறுப்போர்கள் என்று ஒரு பட்டியலே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எடியூரப்பா பதவி விலகினால் கர்நாடகாவின் புதிய முதல்வராக முருகேஷ் ஆர் நிரானி பொறுப்பேற்க கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன,

Recommended Video

    Political Journey Of B.S. Yediyurappa | Karnataka CM Resign | Explained

    2008ஆம் ஆண்டில் கர்நாடகாவில் தனி ஒருவராக செல்வாக்கை செலுத்திபாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தவர் எடியூரப்பா. இந்த முறை முதல்வர் பதவியில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது கடந்த ஜூலை 25 ஆம் தேதி, கட்சியின் மத்திய தலைமையிடமிருந்து வரும் அழைப்புக்காக தான் காத்திருப்பதாக வெளிப்படையாகக் கூறினார். அதாவது முதல்வர் பதவியில் தொடர்வதா வேண்டாமா என்பதை தலைமை முடிவு செய்யும் என்ற தொனியில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

    எடியூரப்பா

    எடியூரப்பா

    இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள கர்நாடகா சட்டப்பேரவைத்தேர்தலில் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தொடங்கப்போவதாகவும் எடியூரப்பா கூறினார். இதனால் எடியூரப்பா பதவி விலகினால் யார் அடுத்த முதல்வர் என்ற பரபரப்பு எழுந்தது. அத்துடன் உண்மையில் தலைமை அப்படி விரும்புகிறதா என்ற கேள்வியும் எழுந்தது.

    நெருக்கடி இல்லை

    நெருக்கடி இல்லை

    இந்த நிலையில், எடியூரப்பா பதவியில் இருந்து விலகிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவாரா என்று கோவாவில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், "எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார். கர்நாடகா சிறப்பாக செயல்படுகிறது. தனது பாணியில் மாநிலத்தை எடியூரப்பா வழிநடத்துகிறார்," என்றார் மேலும் கர்நாடாக மாநிலத்தில் தலைமை பதவிக்கு நெருக்கடி என்று நினைப்பது நீங்கள் தான். நாங்கள் அல்ல," என்றும் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

    முருகேஷ் ஆர் நிரானி

    முருகேஷ் ஆர் நிரானி

    எனினும் 2018 தேர்தலில் பாஜகவின் முகமாக இருந்த எடியூரப்பா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று பகிரங்கமாகக் அறிவித்ததற்கு அவர் மீது அளிக்கப்பட்டுவரும் நெருக்குதலே காரணம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் புதிய முதல்வராக முருகேஷ் ஆர் நிரானி பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

    தலைமை

    தலைமை

    ஆனால் கர்நாடக சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை அமைச்சர் முருகேஷ் ஆர் நிரானி, பாஜக மத்திய தலைமையின் எந்த முடிவிற்கும் கட்டுப்படுவேன் என்று கூறியதுடன், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று நிர்பந்தம் செய்யவில்லை என்றார்.

    English summary
    As Yediyurappa had announced that he would abide by the top leadership's instruction on July 25, speculation is rife that Nirani is among those who would be the next chief minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X