பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. சவுதியில் கைதான இந்தியர்.. விடுதலைக்காக உதவும் இஸ்லாமிய நண்பர்கள்!

சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு சிறை சென்ற இந்தியர் ஹரிஷ் பங்கேராவை விடுவிக்க கர்நாடகாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்க

Google Oneindia Tamil News

பெங்களூர்: சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு சிறை சென்ற இந்தியர் ஹரிஷ் பங்கேராவை விடுவிக்க கர்நாடகாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் பங்கேரா. இவர் சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறார். அங்கு ஏசி மெக்கானிக் பணியில் இவர் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவர் இஸ்லாம் மதத்திற்கும் எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் போஸ்ட் செய்ததாக புகார் எழுந்தது. இவரின் சர்ச்சையான பேஸ்புக் பதிவுகள் எல்லாம் இணையம் முழுக்க வைரலானது.

மகாராஷ்டிராவில் மீண்டும் துணை முதல்வராகிறார் அஜித் பவர்- உள்துறை இலாகாவுடன்? மகாராஷ்டிராவில் மீண்டும் துணை முதல்வராகிறார் அஜித் பவர்- உள்துறை இலாகாவுடன்?

என்ன வைரல்

என்ன வைரல்

மிக முக்கியமாக இவர் மெக்காவை இடித்துவிட்டு அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று போஸ்ட் செய்தது பெரிய வைரல் ஆனது. அதேபோல் முகமது பின் சல்மான் குறித்து இவர் தகாத வார்த்தைகளில் போஸ்ட் செய்ததும் சர்ச்சை ஆனது. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராகவும் சர்ச்சையாக நிறைய போஸ்ட்களை செய்து இருந்தார்.

மிக மோசம்

மிக மோசம்

இதையடுத்து அவருக்கு எதிராக சவுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முடி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து தவறுதலாக பேசியதற்காக ஹரிஷ் பங்கேரா கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக புகார் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஹரிஷ் பங்கேரா

ஹரிஷ் பங்கேரா

இந்த நிலையில் ஹரிஷ் பங்கேராவை விடுவிக்க அவரின் சொந்த ஊரை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக சவுதியில் இருக்கும் தங்கள் உறவினர்கள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் சட்ட ரீதியாக முயன்று வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் ஹரிஷ் பங்கேரா வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வழக்கு எப்படி

வழக்கு எப்படி

அதேபோல் இவரை விடுவிக்க இந்திய வெளியுறவுத்துறையும் தீவிரமாக முயன்று வருகிறது. ஹரிஷ் பங்கேராவின் மனைவி இதுகுறித்து கூறும் போது, என் கணவரின் பேஸ்புக் கணக்கை யாரோ முடக்கிவிட்டார்கள். அவரை விடுதலை செய்ய வேண்டும். அவரின் விடுதலைக்காக உதவி செய்யும் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Muslim friends trying hard to get bail for Harish Bangera who got arrested for Hate post in Saudi Arabia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X