• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கண்டுகொள்ளவேயில்லை.. எடியூரப்பாவை கைவிட்ட மோடி?

|
  Karnataka : கர்நாடக அரசியலில் தொடங்கியது மோதல்..எடியூரப்பாவை கண்டுகொள்ளாத மோடி- வீடியோ

  பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் நடுவேயான உறவில் விரிசல் விழுந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.

  கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

  இதையடுத்து கூட்டணி அரசு நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பான்மை பலத்தை காண்பிக்க முடியாமல், கவிழ்ந்தது.

  நள்ளிரவு எடியூரப்பா

  நள்ளிரவு எடியூரப்பா

  இதையடுத்து பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராக கடந்த 26ம் தேதி வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார். வியாழக்கிழமை இரவு வரை எடியூரப்பா முதல்வராக பதவியேற்க திட்டம் வைத்திருந்தது யாருக்குமே தெரியாது. ஏன் மோடிக்கே தெரியாது. ஆனால் நள்ளிரவிலேயே, பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசி, பதவியேற்புக்கு அனுமதி வாங்கிவிட்டார் எடியூரப்பா.

  எம்எல்ஏக்கள்

  எம்எல்ஏக்கள்

  காங்கிரஸ்-மஜத அரசு கலைந்த பிறகு, குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர பரிந்துரைக்கலாம் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருந்துள்ளது. மோடியும் இதையே விரும்பியிருந்தார். இதற்கு காரணம், சபாநாயகரால் தகுதி நீக்கத்துக்கு உள்ளான சுயேச்சை உட்பட 17 எம்எல்ஏக்களால் நடப்பு சட்டசபை பதவி காலத்தில் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் ஒன்றாகும். மேலும் தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். ஆட்சியமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்தது 113 ஆகும். எனவே மீண்டும் தேர்தலை சந்தித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்பது மோடி திட்டம்.

  எடியூரப்பா திட்டம்

  எடியூரப்பா திட்டம்

  மோடி, அமித்ஷா ஆகிய இருவரின் கோரிக்கையும் ஏற்க எடியூரப்பா மறுத்துவிட்டார். ஏற்கனவே 76 வயதாகும் நிலையில், மீண்டும் தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிக்க முடியாமல் போய்விட்டால் வந்த முதல்வர் வாய்ப்பும் போய்விடும் என்பது எடியூரப்பா எண்ணம். எனவேதான் அவர் அவசரம் காட்டிவிட்டார். ஆனால் இடைத் தேர்தலில் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாமல் போனால் அப்போது எடியூரப்பா ஆட்சி கவிழும் வாய்ப்பே அதிகம்.

  டிவிட்டரில் வாழ்த்து

  டிவிட்டரில் வாழ்த்து

  நாட்டில் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும், புதிய முதல்வருக்கு மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து கூறுவது வழக்கம். ஆனால் சொந்த கட்சியை சேர்ந்த எடியூரப்பாவுக்கு அப்படி ஒரு வாழ்த்தை ஒரு வாரம் ஆகியும் சொல்லவில்லை மோடி.

  அமைச்சர் பதவிகள்

  அமைச்சர் பதவிகள்

  எடியூரப்பாவுக்கு அமித்ஷா மட்டும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவிலும் கூட மேலிடத் தலைவர் என்ற வகையில் முரளிதரராவ் மட்டுமே வந்திருந்தார். இதனிடையே தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 பேரும் தங்களுக்கு அமைச்சர் பதவி தர சட்டச் சிக்கல் இருந்தால், தங்கள் குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வழி செய்ய வேண்டும் என எடியூரப்பாவை நெருக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  It is reported that Prime Minister Narendra Modi and Karnataka Chief Minister Yeddyurappa relationship have broken up.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more