பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரில் பேய் மழை.. இரு ஏரிகள் உடைப்பு.. காட்டாறு போல் காட்சியளிக்கும் மாநகரம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரில் வரலாறு காணாத கனமழை கொட்டி வருகிறது. பெங்களூரே வெள்ளத்தால் மிதக்கிறது.

நேற்று முன் தினம் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகள் மிதக்கின்றன. வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

முன்னெப்போதும் காணாத அளவுக்கு நகரெங்கிலும் வெள்ளப்பெருக்கு உள்ளது.

வெள்ளப்பெருக்கு

பெங்களூரே மிதக்கிறது. முன்னெப்போதும் காணாத அளவுக்கு நகரெங்கிலும் வெள்ளப்பெருக்கு.

பிம்மன்கட்டே ஏரி

ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கும் பிம்மன்கட்டே ஏரி உடைத்துக் கொண்டு ஆர்ப்பரித்து பொங்கி எழும் வெள்ளப்பெருக்கு. மழையால் உடைந்த இரண்டாவது ஏரி இதுவாகும். முதலில் ஒசகெரேஹள்ளி ஏரி உடைந்தது.

வெள்ளநீர்

தெற்கு பெங்களூருவில் ஜெயநகர் 3ஆவது பிளாக்கில் ஆறு போல் பாயும் வெள்ளநீர்.

கனமழை

ஏரிகளை ஆக்கிரமித்தோம். கான்கிரீட் கட்டடங்களை எழுப்பினோம். மழை நீர் பூமியில் செல்ல வழி ஏற்படுத்தவில்லை. மதிப்பில்லாத மழை நீரை சேமிக்கவும் இல்லை, இப்போது இந்த கனமழையால் அவதியடைகிறோம்.

பதவிக்காலம்

இந்த மாநகராட்சியாளர்களின் பதவிக்காலம் தற்போதுதான் முடிவடைந்தது. விரைவில் அவர்களது கடந்த 5 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டபடி வந்து வாக்கு சேகரிப்பார்கள். அப்போது இந்த வெள்ளப்பெருக்கு பட்டியலில் இருந்து மிஸ்ஸாகியிருக்கும் என்கிறார் இந்த வலைஞர்.

English summary
Netisans shared their experience about rain in Bengaluru. This Capital city is floating in flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X