பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடி காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.. ஒசூரை உறைய வைத்த கொலை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடி காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு- வீடியோ

    பெங்களூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரும், கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சுவாதியின் குடும்பத்தார் ஆணவ கொலை செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இவரைவிட உயர்ந்த ஜாதியை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

    Newly wed Hosur husband and wife killed in Karnataka

    இதற்கு சுவாதி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று மாதங்களுக்கு முன்பு, குடும்பத்திற்கு தெரியாமல், திருமணம் செய்துகொண்டு ஓசூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    இந்த நிலையில் திடீரென தம்பதிகள் மாயமாகிவிட்டனர். நந்தீஷின் சகோதரர் சங்கர் கடந்த 11ம் தேதி முதல் புதுமண தம்பதிகள் இருவரையும் காணவில்லை என ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் இவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் மலவள்ளி தாலுக்காவில் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் இருந்து இரண்டு உடல்களை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த உடல்கள் நந்தீஷ் மற்றும் சுவாதியுடையது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் பெண்ணின் தந்தை உட்பட உறவினர்கள் மூன்று பேர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்து உள்ளனர். மாற்று சமுதாயத்தை சார்ந்த காரணத்தால் ஆணவ படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Newly wed Hosur jodi killed in Karnataka, police suspects honour killing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X