பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாமி யாத்திரை போயிருக்கார்.. கடுப்பான கோர்ட்.. ஜன.3க்குள் வராட்டி.. நித்தியானந்தாவுக்கு எச்சரிக்கை

நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிடிக்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நித்தியானந்தாவுக்கு கோர்ட் எச்சரிக்கை- வீடியோ

    பெங்களூரு: நடிகை ரஞ்சிதாவுடன் மாயமாகி உள்ளதாக கூறப்படும் நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கர்நாடகத்தில் மெயின் "ஆபீஸ்" வைத்து இயங்கி வருபவர் கார்ப்பரேட் சாமியார் நித்யானந்தா. நிறைய பாஷை பேசும் இவருக்கு பக்தைகளும் நிறையவே உள்ளனர்.

    அடிக்கடி புகார்கள், சர்ச்சைகளில் மாட்டி கொண்டு விழிக்கும் நித்யானந்தா தற்போதும் ஒரு புகாரில் உள்ளார். 2010-ம் ஆண்டு பக்தை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டது.

    காணவில்லை

    காணவில்லை

    இது சம்பந்தமாக ராம்நகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை பற்றி நித்யானந்தாவிடமும் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட இருந்தது. ஆனால் விசாரணை நடத்த போகும் இந்த நேரத்தில் நித்யானந்தாவை காணவில்லை என்று சொல்லப்பட்டது.

     எங்கே போனார்

    எங்கே போனார்

    வெளிநாட்டுக்கு எங்கேயும் தப்பி போய்விடக்கூடாது என்றுதான் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டாம் என்று போலீசார் சொல்லி இருந்தார்கள். அப்படி இருந்தும் நித்யானந்தா திருட்டு பாஸ்போட்டை வைத்து கொண்டு எங்கே போனார் என்றே தெரியவில்லை.

    நடிகை ரஞ்சிதா

    நடிகை ரஞ்சிதா

    இதனிடையே அவர் கெய்மன் தீவுக்கு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது. அதாவது நேபாள நாட்டுக்கு சாலை மார்க்கமாக சென்று, அதன்பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் கெய்மன் தீவுக்கு சென்றிருக்கலாம் என்றார்கள். அந்த தீவுக்கு போகும்போது கூடவே நடிகை ரஞ்சிதாவையும் அழைத்து கொண்டு போய்விட்டார் என்றும் தகவல்கள் பரவின.

    ஆஜராகவில்லை

    ஆஜராகவில்லை

    எனினும் அவர் மீது சொல்லப்பட்ட பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை நீதிமன்றம் விடுவதாக இல்லை. ஏனென்றால், இதுவரை இந்த வழக்கு சம்பந்தமாக ஒருமுறை கூட கோர்ட்டில் நித்யா ஆஜராகவில்லை. நேற்று ஆஜராகும்படி கோர்ட் சொல்லி இருந்தது. அப்போதும் அவர் ஆஜராகாததால், அவர் சார்பில் அவரது வக்கீல் "நித்யானந்தா ஆன்மீக சுற்றுப்பயணம் போய் இருப்பதாக கூறினார்.

    பிடிவாரண்ட்

    பிடிவாரண்ட்

    தொடர்ந்து ஆஜராகாமலே இருப்பதால் அதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அதனால் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அப்படி திரும்பவும் அவர் ஆஜர் ஆகாவிட்டால் ஜாமீனில் வெளி வர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார்.

    யூ-டியூப் பிரச்சாரம்

    யூ-டியூப் பிரச்சாரம்

    6 மாதமாகவே நித்யானந்தாவை காணவில்லை. ஆனால் தினமும் யூ-டியூப்பில் பிரச்சாரம் மட்டும் செய்கிறார். எங்கிருந்து இந்த பிரச்சாரத்தை அவர் செய்து வருகிறார் என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதனால் நித்யானந்தாவின் தலைமறைவு பற்றி கர்நாடக மாநில சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    English summary
    Samiyar Nithyananda escaped to Cayman Islands. But HC ordered to appear before the 3rd of the trial
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X