பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று முதல்.. பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஊரடங்கு கிடையாது.. எடியூரப்பா அதிரடி

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஜூலை 22ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அந்த மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Recommended Video

    Bangalore உட்பட karnataka முழுக்க ஊரடங்கு கிடையாது.. எடியூரப்பா அதிரடி

    கொரோனா வைரஸ் பரவலை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த பெரு நகரம் என்ற பெருமையை பெங்களூரு வைத்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக இங்கு தினமும் சுமார் 2 ஆயிரம் என்ற அளவுக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாக தொடங்கினர்.

    புதிய மருத்துவ கட்டமைப்பு சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் கர்நாடக அரசு எடுக்கவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    பெங்களூர் ஊரடங்கு

    பெங்களூர் ஊரடங்கு

    இதையடுத்து கடந்த 14ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி அதிகாலை 5 மணி வரை வரை பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுக்க முழுக்க ஊடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    ஊரடங்கு நீட்டிப்பு

    ஊரடங்கு நீட்டிப்பு

    இந்த நிலையில் பெங்களூர் மாநகராட்சி சார்பில், கூடுதலாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் எடியூரப்பா தொடர்ந்து தீவிர ஆலோசனைகளை நடத்தி வந்தார். இந்த நிலையில், இனிமேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாது என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

    ஊரடங்கு இல்லை

    ஊரடங்கு இல்லை

    இதுகுறித்து எடியூரப்பா செவ்வாய்க்கிழமையான நேற்று கூறுகையில், ஜூலை 22ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறது. மக்கள் தங்களது பணிக்கு திரும்பவேண்டும். பொருளாதாரம் மிகவும் முக்கியம். பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொண்டு கொரோனா வைரசுக்கு, எதிராகவும் போராட வேண்டும். லாக்டவுன் நிரந்தர தீர்வு கிடையாது. எனவே கண்டைன்மெண்ட் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும். பிற பகுதிகளில் கட்டுப்பாடுகள் இருக்காது.

    தமிழக மக்கள் காரணம்

    தமிழக மக்கள் காரணம்

    மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வந்த மக்கள் காரணமாக, இந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. மருத்துவ நிபுணர்கள் 5 வியூகங்களை வலியுறுத்துகிறார்கள். தேடிப்பிடித்தல், கண்டறிதல், பரிசோதனை, சிகிச்சை அளித்தல் மற்றும் டெக்னாலஜியை பயன்படுத்துதல் ஆகியவைதான் இந்த ஐந்து விஷயங்கள். அதை கர்நாடக அரசு செய்து, கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    தமிழக வாகனங்கள்

    தமிழக வாகனங்கள்

    அதேநேரம், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா வரக்கூடிய வாகனங்களுக்கு எளிதாக நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேவா சிந்து என்ற வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டு வாகனங்கள் உள்ளே வரலாம் என்பது விதிமுறை. ஆனால், அதில் ஸ்லாட் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. பிற மாநிலங்களிலிருந்து அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வரும் வாகனங்களுக்கு எளிதில் அனுமதி கிடைப்பதில்லையாம்.

    English summary
    There'll be no lockdown from tomorrow, people need to get back to work, economy is also very important, says Karnataka CM BS Yediyurappa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X