பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உணவுக்கே வழியில்லை!" 2 வயது மகளை கொன்ற பெங்களூர் ஐடி ஊழியர்! பிட்காயின் பிஸ்னஸ் நஷ்டத்தால் விபரீதம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 45 வயதான ஐடி ஊழியர் ஒருவர் செய்த கொடூரம் அம்மாநிலம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களும் இப்போது மோசமாக உள்ளது. விலைவாசி உயர்வு அனைத்து நாட்டு மக்களையும் பாதிக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற உலக நாடுகளின் பொருளாதாரங்களே கூட இக்கட்டான சூழலில் தான் இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளிலும் வேலையிழப்பும் கூட அதிகப்படியாகவே நடந்து வருகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதனால் பல்வேறு நிறுவனங்களிலும் ஆட்குறைப்பும் தொடங்கி உள்ளது. ஐடி துறைகளில் அதிலும் குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலையிழப்பு அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய ஐடி நிறுவனங்களில் இதுவரை ஆட்குறைப்பு இல்லை என்றாலும் கூட புதிதாக ஆட்களை எடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே பெங்களூரில் நடந்த ஒரு சம்பவம் பலருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

கொலை

கொலை

பெங்களூரில் உள்ள 45 வயதான ஐடி ஊழியர் ஒருவர் தனது இரண்டு வயது மகளைக் கொலை செய்துள்ளார். தனது மகளுக்கு உணவளிக்கக் கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் இதன் காரணமாகவே அவரை கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அவர் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பி உள்ளது. தனது மகளைக் கொன்ற பிறகு, அந்த ஐடி ஊழியரும் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சடலம்

சடலம்

கடந்த சனிக்கிழமை இரவு கர்நாடகாவின் கோலார் அருகேயுள்ள கெந்தட்டி கிராமத்தில் உள்ள ஏரியில் இரண்டு வயதுக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஏரியின் அருகே நீல நிற கார் ஒன்றும் நின்றுள்ளது. இதைப் பார்த்ததும் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 வயதே ஆன இந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, உடகூராய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 மாதங்களாக வேலை இல்லை

6 மாதங்களாக வேலை இல்லை

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், தந்தையே தனது சொந்த மகளைக் கொலை செய்ததைக் கண்டுபிடித்தனர். இதற்காக 45 வயதான அந்த ஐடி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். மகளையே கொன்ற அந்த நபர் குஜராத்தைச் சேர்ந்த ராகுல் பர்மர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது மனைவி பவ்யாவுடன் பெங்களூரில் குடியேறியுள்ளார். ஐடி ஊழியரான ராகுல் பர்மர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையிழந்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்தவே அவர் சிரமப்பட்டு வந்துள்ளார். உணவுக்கே மிகவும் கஷ்டமான ஒரு சூழல் உருவான நிலையில், தனது மகளையே கொலை செய்த முடிவு செய்துள்ளார் ராகுல்.

பிட்காயின் முதலீடு

பிட்காயின் முதலீடு

இதற்காக இந்த ஏரிக்கு மகளை அழைத்து வந்த ராகுல், மகளுடன் காரிலேயே நீண்ட நேரம் விளையாடியுள்ளார். மேலும், மகளைக் கட்டியணைத்தும் கொஞ்சியுள்ளார். இருப்பினும், உணவுக்கே வழியில்லை என்பதால் வேறு வழியின்றி மகளைக் கொன்றதாக ராகுல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாகவே ராகுலுக்கு வேலை இல்லை. மேலும், பிட்காயின் முதலீட்டிலும் அவருக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலையில் அவர் இருந்துள்ளார்.

போலி புகார்

போலி புகார்

இடையில் ராகுல் பர்மர் தனது வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டதாகவும் பெங்களூரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக அவர் அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று விசாரிப்பாராம். இருப்பினும், இந்த புகாரை விசாரித்த போது ​அதிர்ச்சி தகவலைக் கண்டறிந்துள்ளனர். அதாவது தனது வீட்டில் இருந்த நகைகளை ராகுலே திருடிச் சென்று அடகு வைத்துள்ளார். வேலையில்லாமல் இருந்ததால் இதையெல்லாம் செய்து தான் அவரால் குடும்பத்தையே நடத்த முடிந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

முன்னதாக கடந்த நவ. 15ஆம் தேதி முதல் தனது கணவரையும் மகளையும் காணவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு, அந்த குழந்தையின் தாய் பவ்யா போலீஸ் ஸ்டேஷனில் அளித்திருந்தார். இந்தச் சூழலில் தான் ராகுல் தனது சொந்த மகளையே கொன்றுவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலி திருட்டு வழக்கில் எங்கு போலீசார் தன் மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கூட அவர் இப்படிச் செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
Bengalore Techie Kills her 2-Year-Old Daughter as he doesn't have job for 6 months: Many IT employees might loose job due to the recession.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X