பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒழுங்கா சொல்லித் தர வேண்டமா? கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'காணாமல் போன' காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஶ்ரீமந்த் பாட்டீல் அளித்த பேட்டி ட்வீட்டிஸ்டுகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அப்படி ஒரு அபத்தமான பேட்டியை கொடுத்து வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

கர்நாடகா சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு புகைப்படத்தை காட்டி முழக்கங்களை எழுப்பினர். அந்த புகைப்படத்தில் இருந்தது ஶ்ரீமந்த் பாட்டீல்தான்.

No one kidnapped me, says Shrimant Patil

பெங்களூருவில் காங்கிரஸ் கட்டுப்பாட்டு ரிசார்ட்டில் தங்கி இருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென காணாமல் போனார். அவரை விடிய விடிய காங்கிரஸ் தலைவர்கள் தேடினர்.

பின்னர் அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பாஜகவினரே ஶ்ரீமந்த் பாட்டீலை கடத்தியதாக குற்றம்சாட்டி சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஶ்ரீமந்த் பாட்டீல் அளித்ததாக கூறப்படும் பேட்டி ஒன்று பெரும் பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. அந்த பேட்டியில், ஒரு சொந்த வேலையாக சென்னைக்கு சென்றிருந்தேன். அங்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவர்களிடம் சென்றேன். அவர்களது ஆலோசனைப்படியே மும்பை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன். யாரும் என்னை கடத்தவில்லை என கூறியுள்ளார். இந்த நகைச்சுவையான பேட்டிதான் ட்வீட்டிஸ்டுகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

சென்னையில் இல்லாத மருத்துவமனைகளா? என்கிற கேள்வி ஒருபக்கம்.. ஏன் பெங்களூருவுக்கும் கூட திரும்பி போயிருக்கலாமே? என்கிற மற்றொரு கேள்வி. அத்துடன் பாஜக ஒழுங்கா சொல்லித்தரவில்லையே என்கிற கிண்டல் வேறு.

அதகள பேட்டிதான்!

English summary
Congress MLA Shrimant Patil said that "I went to Chennai for some personal work & felt some pain in the chest there. I visited hospital & on the suggestion of the doctor, I came to Mumbai and got admitted here. Once I recover, I'll go back to Bengaluru".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X