பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு சந்தோஷம் இல்ல.. கடவுளை வேண்டிக்கிறேன்.. என்ன எடியூரப்பா இப்படி சொல்லிட்டாரு.. பாஜக ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Karnataka bandh: Bangalore-Mysore road full of traffic

    பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் தனக்கு சந்தோஷம் இல்லை என்று அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான, பி.எஸ்.எடியூரப்பா கூறிய கருத்து அந்த கட்சி தலைவர்களையே, திடுக்கிட வைத்துள்ளது.

    பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில், காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவரது கைதை கண்டித்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று பந்த் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    டிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்புடிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்பு

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், கூறியதாவது: ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்கிறேன், டி.கே.சிவகுமாரின் கைது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. அவர் விரைவில் விடுதலையடைய வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்.

    வெறுக்கவில்லை

    வெறுக்கவில்லை

    நான் என் வாழ்க்கையில் யாரையும் வெறுக்கவில்லை, யாருக்கும் தீங்கு விளைவித்ததும் கிடையாது. நீதி அதன் கடமையை செய்யும். சிவகுமார் விடுதலையாகும் செய்தியறிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சிதான் அடைவேன்.

    காங்கிரஸ் குற்றச்சாட்டு

    காங்கிரஸ் குற்றச்சாட்டு

    இதனிடையே சிவகுமாரின் கைது பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை என்றும், பொருளாதாரம் மற்றும் ரூபாய் வீழ்ச்சியை மறைத்து, வேலை இழப்பு போன்ற பிரச்சினைகளை மறைக்கும் ஒரு முயற்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

    நட்பு

    நட்பு

    இந்த நிலையில், எடியூரப்பா, இவ்வாறு கூறியுள்ள கருத்து, பாஜகவினருக்குள்ளேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிவகுமாருக்காக அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்ததால்தான், கடந்த கால ஆட்சியின்போது, எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குகள் பாய்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka Chief Minister BS Yediyurappa on Tuesday said he was "not happy" with the arrest of political rival DK Shivakumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X