பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை: தேவகவுடா

Google Oneindia Tamil News

பெங்களூரு: ராஜ்யசபா தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

கர்நாடகாவின் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக் காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது. காங்கிரஸின் ராஜீவ் கவுடா, ஹரி பிரசாத், பாஜகவின் பிரபாகரன் கோரே, ஜேடிஎஸ்-ன் குபேந்திர ரெட்டி ஆகியோர் பதவி காலம் முடிவடைவதால் ராஜ்யசபா தேர்தல் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

Not interested on contesting Rajya Sabha polls, says HD Deve Gowda

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்யசபா எம்.பியாகி மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என ஜேடிஎஸ் மூத்த தலைவர்கள் கூறிவந்தனர். இது தொடர்பாக ஜேடிஎஸ் செய்தித் தொடர்பாளர் தன்வீர் அகமது உல்லா கூறுகையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் தேவகவுடாவை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட கேட்டுக் கொண்டுள்ளது.

மத்தியில் கர்நாடகாவின் குரலை வலிமையாக எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படுபவர் தேவகவுடா. அவருக்கு நிச்சயம் உரிய வாக்குகள் கிடைக்கும் என்றார். ஆனால் தமக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தேவகவுடா கூறியுள்ளார்.

சி.ஏ.ஏ-க்கு எதிராக டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்- மமதா, மாயாவதி பங்கேற்க மறுப்பு சி.ஏ.ஏ-க்கு எதிராக டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்- மமதா, மாயாவதி பங்கேற்க மறுப்பு

இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தேவகவுடா அளித்த பேட்டியில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. ஜேடிஎஸ் கட்சியை வலிமைப்படுத்துவதுதான் என் நோக்கம். எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடப் போவது இல்லை என ஏற்கனவே நான் அறிவித்திருக்கிறேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நடகாவின் ஹாசன் லோக்சபா தொகுதியில் 1991 முதல் 2014-ம் ஆண்டு வரை 5 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவகவுடா. கடந்த தேர்தலில் தும்கூர் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் பசவராஜிடம் தோல்வி அடைந்தார் தேவகவுடா என்பது குறிப்பிடத்தக்கது..

English summary
Former Prime Minister HD Deve Gowda had said that he is not Not interested on contesting Rajya Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X