பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு : பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மையின் மகன் ஆவார். முன்னதாக கர்நாடகாவில் தேவகௌடாவின் மகன் குமாரசாமி முதல்வராக இருந்துள்ளார். அந்த வரிசையில் இரண்டாவதாக கர்நாடகாவில் முன்னாள் முதல்வரின் மகன் முதல்வராகி உள்ளார்.

Recommended Video

    Who Is Basavaraj Bommai | Karnataka new CM

    பசவராஜ் பொம்மை மட்டுமல்ல, இந்தியாவில் இதுவரை அப்பாவை தொடர்ந்து மகன்கள் யார் யார் மாநில முதலமைச்சர்களாக பணியாற்றி உள்ளார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகௌடா 1994-96 வரை கர்நாடகாவின் 14 வது முதல்வராக பணியாற்றினார். அவரது மகன் குமாரசாமி 2018-19 முதல்வராக பதவி வகித்துள்ளார்.

    பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கருணாநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படம்.. தரமான நிகழ்ச்சி அது! பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கருணாநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படம்.. தரமான நிகழ்ச்சி அது!

    உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் அகிலேஷ் யாதவ் 2012 முதல் 2017 வரை முதல்வராக இருந்துள்ளார்.

    நவீன் பட்நாயக்

    நவீன் பட்நாயக்

    ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் பிஜு பட்நாயக் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக இருந்தார். அவரது மகன் நவீன் பட்நாயக் மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் முதலமைச்சரான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டியும் இந்த லிஸ்டில் உள்ளார். அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக இருந்துள்ளார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    தமிழ்நாட்டில், திமுகவின் மறைந்த தலைவர் மு. கருணாநிதி 1969-2011 முதல் ஐந்து முறை முதல்வராக இருந்தார். அவரது மகன் மு.க..ஸ்டாலின் தமிழகத்தின் எட்டாவது மற்றும் தற்போதைய முதல்வராகி தனது தந்தையின் பாணியில் செயல்பட்டு வருகிறார்.

    அசோக் சவான்

    அசோக் சவான்

    இந்திய அரசியலில் மேலும் சில எடுத்துக்காட்டுகளையும் பார்ப்போம். உத்தரபிரதேச முதல்வராக ப காங்கிரஸ் தலைவரான ஹேம்வதி நந்தன் பாஹுகுனா இருந்தார். அவரது மூத்த மகனும் பாஜகவைச் சேந்தவருமான விஜய் பாஹுகுனா உத்தரகண்ட் மாநிலத்தின் 6 வது முதல்வராக இருந்தார். மகாராஷ்டிராவின் முதல்வர்களாக காங்கிரசை சேர்ந்த சங்கர்ராவ் சவான் இரண்டு முறை இருந்தார். அவரது மகன் அசோக் சவான் 2008-10 வரை மாகாராஷ்ராவின் முதல்வராக இருந்துள்ளார்.

    English summary
    the appointment of Basavaraj Bommai as the new Karnataka Chief Minister on Tuesday, makes him join the ranks of an elite club where a CM’s son went on to become a chief minister himself. Bommai is the son of SR Bommai, former Karnataka CM,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X