பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொத்து கொத்தாக கொரோனா கேஸ்கள்.. கிளஸ்டர்களாக மாறும் பெங்களூர் அபார்ட்மென்ட்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கொரோனா கிளஸ்டர்களாக மாறி வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு நகரின் பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள ஒரு அபார்ட்மென்டில் 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பெல்லந்தூர் பகுதியிலுள்ள அப்பார்ட்மென்டில் 10 கேஸ்கள் பதிவாகியுள்ளன.

மகாதேவபுரா மண்டலத்திற்கு உட்பட்ட இந்த அபார்ட்மென்டில் 9 பிளாக்குகள் உள்ளன. 1500 பேர் வசிக்கிறார்கள். இங்குள்ள 10 பேருக்கு கடந்த 15 முதல் 22ம் தேதிக்குள் கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. எனவே 6 பிளாக்குகள் கன்டெயின்மென்ட் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற 3 பிளாக்குகளும் சுமார் 200 மீட்டர்கள் தூரத்தில் உள்ளன. அங்கு யாருக்கும் இதுவரை கொரோனா கேஸ்கள் பதிவாகவில்லை.

 மகாராஷ்டிராவில் 60% அமைச்சர்களுக்கு தொற்று.. கோர தாண்டவமாடும் கொரோனா மகாராஷ்டிராவில் 60% அமைச்சர்களுக்கு தொற்று.. கோர தாண்டவமாடும் கொரோனா

நர்சிங் கல்லூரி

நர்சிங் கல்லூரி

அப்பார்ட்மென்ட் முழுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சியளிக்கிறது.
பிப்ரவரி 13ம் தேதி, காவல்பைரசந்திரா பகுதியிலுள்ள மஞ்சுஸ்ரீ நர்சிங் கல்லூரியில் 42 மாணவர்களுக்கு கொரோனா பதிவானது. பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இது சமீபத்தில் பெங்களூரின் முதல் கொரோனா கிளஸ்டர்.

 அப்பார்ட்மென்ட்

அப்பார்ட்மென்ட்

இதையடுத்து பிப்ரவரி 15ம் தேதி பொம்மனஹள்ளி, எஸ்என்என் ராஜ் லேக் வியூ அபார்ட்மென்டில் 104 பேருக்கு கொரோனா பதிவாகியிருந்தது. அதில் சிலர் அருகேயுள்ள பிரபல டிராப்ர்மென்டல் ஸ்டோருக்கு பொருள் வாங்க சென்றவர்கள். இதையடுத்து அந்த பகுதியில் சுற்றுவட்டாரத்திலுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களுக்கு சென்றவர்கள் அனைவரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.

நடவடிக்கை தீவிரம்

நடவடிக்கை தீவிரம்

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா, கேரளாவையடுத்து, கர்நாடகாதான் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா பரிசோதனை அறிக்கை

கொரோனா பரிசோதனை அறிக்கை

கேரளா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை அறிக்கை கொண்டுவர வேண்டும் என கர்நாடக உத்தரவிட்டுள்ளது. எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

English summary
Apartments in Bangalore are turning into corona clusters. One week ago, 103 people were infected with the corona in an apartment in the Bommanahalli area of ​​the city, while 10 cases were reported in an apartment in the Bellandur area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X