பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா சரித்திரத்தில் 5 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தது 3 பேர் மட்டும்தான்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவின் அரசியல் வரலாற்றில் முதல்வராக 5 ஆண்டுகாலம் முழுவதும் பதவியில் இருந்தது இதுவரை 3 பேர் மட்டும்தான்.

கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண் வைக்கின்றனர். ஆனால் அங்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பலரும் 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தது இல்லை என்பதுதான் வரலாறு.

ஹனுமந்தையா தொடங்கி குமாரசாமி வரை 20-க்கும் மேற்பட்டோர் முதல்வராக இருந்துள்ளனர். 1952-ல் முதல் மைசூர் மாகாணத்தின் சட்டசபையின் போது முதல்வராக இருந்த ஹனுமந்தையா 4 ஆண்டுகள் 142 நாட்கள் பதவியில் இருந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மஞ்சப்பா 73 நாட்கள் பதவியில் இருந்தார். பின்னர் நிஜலிங்கப்பா 1 ஆண்டு 197 நாட்கள் முதல்வராக இருந்தார்.

நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா.. பாஜகவை தனி நபராக தோளில் சுமந்தவர் நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா.. பாஜகவை தனி நபராக தோளில் சுமந்தவர்

முதுபெரும் தலைவர் நிஜலிங்கப்பா

முதுபெரும் தலைவர் நிஜலிங்கப்பா

2-வது சட்டசபையின் போது முதல்வராக இருந்த ஜாட்டி 3 ஆண்டுகள் 297 நாட்கள் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து கந்தி 98 நாட்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். 3-வது சட்டசபையின் போது முதல்வராக பதவியேற்ற நிஜலிங்கப்பாதான் முதல் முறையாக முழுமையாக பதவி காலத்தை நிறைவு செய்தார்.

5 ஆண்டுகள் தேவராஜ் அர்ஸ்

5 ஆண்டுகள் தேவராஜ் அர்ஸ்

1967-ல் முதல்வராக பதவியேற்ற வீரேந்திர பாட்டில் 2 ஆண்டுகள் 293 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தார். 1971-ல் கர்நாடகா மைசூர் மாகாண அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு 1 ஆண்டுகாலம் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. பின்னர் கர்நாடகா மாநிலமாக உருவானபோது 1972-ல் தேவராஜ் அர்ஸ் முதல்வரானார். நிஜலிங்கப்பாவை தொடர்ந்து முதல்வர் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்தவர் தேவராஜ் அர்ஸ். 1977-ல் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி 59 நாட்கள் அமலில் இருந்தது.

ராமகிருஷ்ண ஹெக்டே

ராமகிருஷ்ண ஹெக்டே

இதனைத் தொடர்ந்து மீண்டும் முதல்வரான தேவராஜ் அர்ஸ் 1 ஆண்டு 313 நாட்கள்தான் பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் குண்டுராவ் 2 ஆண்டுகள் 359 நாட்கள் பதவியில் இருந்தார். முதல்வராக இருந்த ராமகிருஷ்ணஹெக்டேவும் முழுமையாக முதல்வர் பதவியில் நீடித்தது இல்லை.

சித்தராமையா சாதனை

சித்தராமையா சாதனை

எஸ்.ஆர். பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, ஜே.எச். பாட்டீல், எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா,சதானந்தா கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என நீளும் முதல்வர்கள் எவருமே முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தது இல்லை. மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் சித்தராமையா 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளும் முதல்வராக இருந்தார்.

குமாரசாமி பதவி இழப்பு

குமாரசாமி பதவி இழப்பு

தற்போது குமாரசாமி 14 மாதங்களில் முதல்வர் பதவியை இழந்திருக்கிறார். மீண்டும் முதல்வராகும் எடியூரப்பாவும் கூட எஞ்சிய ஆண்டுகள்தான் முதல்வராக இருப்பார்.

English summary
Three chief ministers only have been able to complete their full five-year term in the history of Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X