பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயிர்பெற்ற ஆபரேஷன் கமலா.. மஜத - காங்கிரஸ் பிரச்சனையின் பின்னணியில் பாஜக.. கர்நாடகாவில் பரபர!

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இடையே நடந்து வரும் பிரச்சனைக்கு பாஜகதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் காங்கிரஸ் மதஜ கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இடையே நடந்து வரும் பிரச்சனைக்கு பாஜகதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கர்நாடகாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. தற்போது கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.

    கடந்த 8 மாதமாக இந்த கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியில் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகிறது. அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜகவால் அப்போது ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.

    என்ன சொன்னார்கள்

    என்ன சொன்னார்கள்

    இந்த நிலையில்தான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கர்நாடக எம்எல்ஏ எஸ்டி சோமசேகர், கர்நாடகாவில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்வராக வந்தால் மீண்டும் கர்நாடக உண்மையான வளர்ச்சியை பார்க்கும். அதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ சி புத்ரங்காச்செட்டி ''சித்தராமையாதான் இப்போதும் எங்கள் முதல்வர்'' என்று கூறினார்.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதற்கு பதில் அளித்த கர்நாடக முதல்வர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, நான் எப்போதும் பதவி விலக தயார். காங்கிரஸ் கட்சிக்கு நான் முதல்வராக இருக்க விருப்பமில்லை என்றால் நான் பதவி விலகிக் கொள்கிறேன். எனக்கு பிரச்சனை இல்லை.

    மிக மோசம்

    மிக மோசம்

    காங்கிரஸ் எம்எல்ஏக்களின் இந்த செயலால் கஷ்டப்பட போவது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லை மீறி போகிறார்கள். காங்கிரஸ் தங்களது எம்.எல்.ஏக்களை அடக்கி வைக்க வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்வேன் என்று காங்கிரஸுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆபரேஷன் உயிர்பெற்றது

    ஆபரேஷன் உயிர்பெற்றது

    கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக ஆபரேஷன் கமலாவை இதுவரை மூன்று முறை கையில் எடுத்து இருக்கிறது. ஆனால் அனைத்து முறையும் பாஜக அதில் தோல்வி அடைந்துவிட்டது. இந்த நிலையில் இன்று ஆபரேஷன் கமலா மீண்டும் உயிர்பெற்று இருப்பதாக பாஜகவினர் பேசிக்கொள்கிறார்கள். பாஜக பல திட்டங்களை வைத்து செயல்படுவதாக கூறுகிறார்கள்.

    என்ன ஆபரேஷன்

    என்ன ஆபரேஷன்

    அதாவது காங்கிரஸ் எம்எல்ஏக்களை மஜதவிற்கு எதிராக பேச வைத்து பாஜக இப்படி செய்வதாக கூறுகிறார்கள். அதாவது மஜதவிற்கு எதிராக பேசிய இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பாஜகவின் கட்டளையின் பெயரிலேயே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் இப்படி பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Operation Kamala On: BJP might be the reason between Congress and JDS rift in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X