பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்பரீஷ் மரணம்... ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி

மறைந்த நடிகர் அம்பரீஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    யார் இந்த அம்பரீஷ் ?

    பெங்களூர்: மறைந்த நடிகர் அம்பரீஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. இந்தநிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கன்டிராவா மைதானத்தில் அம்பரீஷின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    People pay last respects to Ambareesh at Kanteerava stadium in Bengaluru

    [மாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்ட அம்பரீஷ்.. "இறுதி மூச்சு வரை மக்களுக்காக போராடினாரே"]

    முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் காலையிலேயே நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 200 படங்களுக்கு மேல் நடத்துள்ள அம்பரீஷ்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

    சினிமா துறையிலும், அரசியலிலும் ஜொலித்த அம்பரீஷ்க்கு இறுதி செலுத்துவதற்காக அவரது ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்து, நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல கன்னட நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் என தொடர்ந்து வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் அம்பரீஷ் காலமானதை தொடர்ந்து , மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மண்டியாவில் திங்கள் கிழமை வரை மதுப்பானக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மைசூரு- பெங்களூரு சாலையில் செல்லும் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

    ஜனதா தளக் கட்சியில் முதன்முதலில் அரசியல் களம்கண்ட அம்பரீஷ், கடைசியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2006 - 08 வரை தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார். 1972 ம் ஆண்டு அவர் நடித்த நாகராவு படம் தேசிய விருதை அவருக்கு பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kannada actor and former union minister Ambareesh died on Saturday, people pay last respects to Ambareesh at Kanteerava stadium in Bengaluru
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X