பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரை அதிர வைத்த அந்த மர்ம சத்தம்... "ஏலியன்" அச்சத்தால் குழப்பம் அடைந்த மக்கள்.. புது சர்ச்சை

பெங்களூரில் இன்று ஏற்பட்ட பயங்கர சத்தம் காரணமாக மக்கள் இடையே ஏலியன் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் பலர் விவாதம் செய்ய தொடங்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் இன்று ஏற்பட்ட பயங்கர சத்தம் காரணமாக மக்கள் இடையே ஏலியன் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் பலர் விவாதம் செய்ய தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    தீடிரென கேட்ட பயங்கர சத்தம்... நடுங்கிப்போன பெங்களூர் மக்கள்

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிகுண்டு சத்தம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரியாக 1.30 மணி அளவில் பெங்களூரில் பெரிய அளவில் இன்று சத்தம் கேட்டது. வெடிகுண்டு வெடித்தது போல சத்தம் கேட்டது.

    ஆனால் இந்த சத்தத்திற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகவில்லை. இந்த சத்தம் எப்படி ஏற்பட்டது என்று மக்கள் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

    பெங்களூரை உலுக்கிய சத்தம்.. பூகம்பம் இல்லை, மிராஜ் விமானம் பறக்கவில்லை.. பரபர பின்னணி இதுவா?பெங்களூரை உலுக்கிய சத்தம்.. பூகம்பம் இல்லை, மிராஜ் விமானம் பறக்கவில்லை.. பரபர பின்னணி இதுவா?

    விசாரணை நடக்கிறது

    விசாரணை நடக்கிறது

    இது தொடர்பாக கர்நாடக போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பெங்களூரில் இருக்கும் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் இது தொடர்பான போலீசார் விசாரித்தனர். ஆனால் போர் விமானம் எதுவும் அங்கு பறக்கவில்லை என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மிராஜ் விமானம் காரணமாக இந்த சத்தம் வந்ததாக செய்திகள் வந்தது. ஆனால் மிராஜ் விமானம் அந்த நேரத்தில் பறக்கவில்லை என்று விமானப்படை விளக்கி உள்ளது.

    அதிர்வு ஏற்பட்டது

    அதிர்வு ஏற்பட்டது

    இந்த சத்தம் கேட்ட போது அந்த பகுதியில் பெரிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டது. பெங்களூர் முழுக்க இந்த சத்தம் வந்துள்ளது. அதேபோல் அதிர்வும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏதாவது வெடிகுண்டு வெடித்து இருக்கலாம் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் மக்கள் ஏலியன் குறித்து அச்சம் எழுப்ப தொடங்கி உள்ளனர். ஏலியன்கள் குறித்து மக்கள் இதனால் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

    ஏலியன் அச்சம்

    ஏலியன் அச்சம்

    பெங்களூருக்கு மேலே ஏலியன்களும் பறக்கும் தட்டுகள் சென்று இருக்க வாய்ப்பு உள்ளது . அதனால்தான் இந்த சத்தம் ஏற்பட்டு இருக்கும் என்று மக்கள் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளனர். வானத்தில் ஏதாவது ராக்கெட் மிக அதிக வேகத்தில் சென்றால் இது போல சத்தம் வரும். இதனால் இந்த சத்தம் ஏலியன்கள் பறக்கும் தட்டு மூலம் ஏற்பட்டு இருக்கும் விவாதங்கள் எழுந்துள்ளது.

    டிவிட்டர் டிரெண்ட்

    இது தொடர்பாக தற்போது பலர் டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் ஏலியன்கள் என்ற வார்த்தை தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி உள்ளது. பெங்களூரில் ஏலியனின்களின் யுஏஃப்ஓ விமானம் சென்று இருக்க வாய்ப்புள்ளது என்று சர்ச்சையை எழுப்பும் வகையில் பேசி வருகிறார்கள். சிலர் இதை வைத்து காமெடியும் செய்து வருகிறார்கள். இணையம் முழுக்க இது விவாதமாக மாறியுள்ளது.

    அமெரிக்கா எச்சரிக்கை

    சில நாட்களுக்கு முன்தான் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முதல்முறையாக அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) வகை விமானங்களின் வீடியோக்களை வெளியிட்டது. ஏலியன்கள் பறப்பதாக அஞ்சப்படும் unidentified flying objects எனப்படும் யுஎஃப்ஓ விமானங்களின் வீடியோக்கள் ஆகும் இது. முதல் முறையாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ வகை விமானங்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

    English summary
    People started talking about Aliens after a huge sound in Bangalore today afternoon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X