பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரியான போட்டி.. ராகுல் போலவே தென்னிந்தியாவில் களமிறங்க மோடி திட்டம்?.. பெங்களூர் தெற்கில் போட்டியா?

லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக பிரதமர் மோடி பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக பிரதமர் மோடி பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

லோக்சபா தேர்தல் மிக வேகமாக நெருங்கி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது.

கர்நாடகாவில் இரண்டு கட்டமாக ஏப்ரல் 18 மற்றும் 23ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பெங்களூர் தெற்கு தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

தேர்தலில் போட்டியில்லை.. எம்.பி உமா பாரதி திடீர் முடிவு.. பாஜகவின் துணைத் தலைவராகிறார்! தேர்தலில் போட்டியில்லை.. எம்.பி உமா பாரதி திடீர் முடிவு.. பாஜகவின் துணைத் தலைவராகிறார்!

மோடி வாரணாசி

மோடி வாரணாசி

பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதி அவருக்கு மிகவும் ராசியான தொகுதி என்பதால் அங்கு மீண்டும் போட்டியிட உள்ளார். பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி அங்கு போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

இன்னொரு தொகுதி

இன்னொரு தொகுதி

இந்த நிலையில் பிரதமர் மோடி இரண்டாவதாக போட்டியிடும் தொகுதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று செய்திகள் வருகிறது. பெங்களூர் தெற்கு தொகுதிக்கு 26ம் தேதியோடு வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அதனால் இன்றோ நாளையே பாஜக இதற்கான வேட்பாளர்களை அறிவிக்கலாம்.

ஏன் இந்த தொகுதி

ஏன் இந்த தொகுதி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்னிந்தியாவில் ஒரு தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். அதனால் பிரதமர் மோடியும் அதே முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. 1991ல் இருந்து பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக கைவசம்தான் உள்ளது. இதன் எம்.பி அனந்தகுமார் மறைவு காரணமாக இந்த தொகுதி காலியானது.

அறிவிக்கவில்லை

அறிவிக்கவில்லை

இந்த தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது. அங்கு மோடி போட்டியிட போகிறார் என்று செய்திகள் வருவதால் காங்கிரஸ் சரியான வேட்பாளர் ஒருவரை இங்கு நிறுத்த யோசித்து வருகிறது. பாஜக சார்பாக இந்த தொகுதியில் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினி ஆனந்தகுமார் போட்டியிட கூட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
PM Modi may contest from Bangalore South constituency in Lok Sabah elections says sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X