பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜீவ் காந்தி மீது மோடியின் விமர்சனங்கள் தேவையில்லாதது- மோடியே எதிர்பார்க்காத இடத்திலிருந்து கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜீவ் காந்தி குறித்து மோடி விமர்சித்ததில் தவறில்லை: தேர்தல் ஆணையம் அதிரடி!- வீடியோ

    பெங்களூர்: ராஜீவ் காந்தி ஊழல்வாதி என பிரதமர் மோடி பேசியதற்கு அவர் எதிர்பார்க்காத தரப்பிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் எல்லோராலும் ஊழலற்றவர் என நம்பப்பட்டவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.

    என் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனைஎன் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனை

    கண்டனம்

    கண்டனம்

    ஆனால் அவரது வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதி என்ற பெயருடன் முடிந்தது என ராஜீவ் மீதான போபர்ஸ் வழக்கை குத்திக் காட்டி மோடி பேசியது கடும் கண்டனத்துக்குள்ளானது. பிரதமர் மோடியின் விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    படுகொலை

    படுகொலை

    இதெல்லாம் சரி. ஆனால் பிரதமர் மோடியே எதிர்பார்க்காத இடத்திலிருந்து கண்டனம் வந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் ஸ்ரீனிவாச பிரசாத் கூறுகையில் ராஜீவ் காந்தியை எல்டிடிஇயினர் திட்டமிட்டு படுகொலை செய்தனர்.

    தேவையில்லாதது

    தேவையில்லாதது

    அவர் ஒன்றும் ஊழல் குற்றச்சாட்டினால் உயிரிழக்கவில்லை. அவர் ஊழல் செய்தார் என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏன் நான் கூட நம்ப மாட்டேன். மோடி மீது எனக்கு அளவுக்கடந்த மரியாதை உண்டு. ஆனால் தற்போது அவர் ராஜீவ் காந்தி குறித்து பேசுவது தேவையில்லாதது என்றார்.

    பாஜகவில் இணைப்பு

    பாஜகவில் இணைப்பு

    பாஜக தலைவர் ஒருவரே மோடியின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஸ்ரீனிவாச பிரசாத், அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தார். பின்னர் காங்கிரஸில் இணைந்து மாநில அமைச்சரானார். இதைத் தொடர்ந்து மீண்டும் கடந்த 2017-இல் பாஜகவில் இணைந்தார்.

    English summary
    PM Narendra Modi got refusal from unexpected quarters for making criticism on Former PM Rajiv Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X