பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த ஊரிலும் நடக்காத இந்த வினோதத்தை பார்த்தீர்களா.. போலீஸார் செய்த காரியத்தை பாருங்க

Google Oneindia Tamil News

பெங்களூர்: நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டார் வரதட்சிணை தராததால் தங்களது பெற்றோர் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக இளைஞர் ஒருவர் புகார்
அளித்ததன் பேரில் போலீஸாரே வரதட்சிணை கொடுத்து திருமணத்தை செய்து வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜண்ணா (27). இவர் பெங்களூருவில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா ஜோதிகவுடனபுரம் பகுதியை சேர்ந்த அம்பிகாவுக்கும் (25) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிச்சயதார்த்தத்தின் போது ராஜண்ணாவின் பெற்றோர் வரதட்சிணையாக அம்பிகாவின் பெற்றோரிடம் ரூ.2 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க அம்பிகாவின் பெற்றோரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

சேவல் கொண்டை கேள்விப்பட்டிருப்போம்.. சேவலுக்கே கொண்டை போடுவதைப் பாத்திருக்கீங்களா! சேவல் கொண்டை கேள்விப்பட்டிருப்போம்.. சேவலுக்கே கொண்டை போடுவதைப் பாத்திருக்கீங்களா!

வரதட்சிணை

வரதட்சிணை

ஆனால் அவர்களால் அந்த பணத்தை திரட்ட முடியவில்லை. மேலும் திருமண நாளும் நெருங்கிக் கொண்டே இருந்தது. இதற்கிடையே வரதட்சிணை பணத்தை கேட்டு ராஜண்ணாவின் பெற்றோர், அம்பிகாவின் பெற்றோருக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும் வரதட்சிணை கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் அம்பிகாவின் பெற்றோர் மனமுடைந்து காணப்பட்டனர்.

காதலிக்க ஆரம்பித்தனர்

காதலிக்க ஆரம்பித்தனர்

இதற்கிடையே அம்பிகாவும், ராஜண்ணாவும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்தனர். இதில் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். வாழ்ந்தால் உன்னுடன்தான் வாழ்வேன் என்கிற அளவுக்கு இருவரும் பழக ஆரம்பித்துவிட்டனர்.

அழுதார்

அழுதார்

திருமணத்திற்கு ஏற்பட்ட வரதட்சணை பிரச்சினை இருவருக்கும் பேரிடியாக இருந்தது. இதுபற்றி அம்பிகா, ராஜண்ணாவிடம் கூறி அழுதார். இதையடுத்து ராஜண்ணா, நான் கண்டிப்பாக உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அம்பிகாவிடம் தெரிவித்தார். மேலும் வரதட்சிணை கேட்க வேண்டாம் என்று தனது பெற்றோரிடம் ராஜண்ணா கூறினார்.

அதை கேட்கவில்லை

அதை கேட்கவில்லை

ஆனால் அவர்கள் வரதட்சிணை இல்லாவிட்டால் திருமணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று கூறினர். இதனால் ராஜண்ணா, வரதட்சிணை வாங்குவது தவறு என்று தனது பெற்றோரிடம் எடுத்துக் கூறினார். இருப்பினும் அவர்கள் அதை கேட்கவில்லை.

சாம்ராஜ்நகர்

சாம்ராஜ்நகர்

இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளான நவம்பர் 8-ஆம் தேதி வந்தது. அப்போது வரதட்சிணை கொடுக்காததால் ராஜண்ணாவின் பெற்றோர் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜண்ணா, வரதட்சிணை கேட்ட தனது பெற்றோர் மீது சாம்ராஜ்நகர் புறநகர் போலீசில் புகார் செய்தார்.

பிடிவாதம்

பிடிவாதம்

அதன்பேரில் போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அம்பிகாவின் பெற்றோர், வரதட்சிணை கொடுத்தால்தான் திருமணத்தை நடத்த சம்மதிப்போம் என்று ராஜண்ணாவின் பெற்றோர் பிடிவாதமாக தெரிவித்தனர்.

திருமணத்தை நடத்தி

திருமணத்தை நடத்தி

இதையடுத்து அம்பிகா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நிலையைக் கண்டும், அம்பிகாவை திருமணம் செய்வதில் ராஜண்ணா உறுதியாக இருந்ததைப் பார்த்தும் போலீசார் ஒரு முடிவெடுத்தனர். அதாவது தாங்களே வரதட்சிணை பணத்தை கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பது என்று முடிவு செய்தனர்.

மீதமுள்ள பணத்துக்கும் கேரண்டி

மீதமுள்ள பணத்துக்கும் கேரண்டி

அதன்பேரில் சாம்ராஜ்நகர் புறநகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து போலீசாரும் தங்களால் முடிந்த தொகையை ஒன்று திரட்டினர். அவ்வாறாக மொத்தம் ரூ.40 ஆயிரம் சேர்ந்தது. அந்த பணத்தை வரதட்சிணையாக ராஜண்ணாவின் பெற்றோரிடம் போலீஸார் கொடுத்தனர். மீதமுள்ள ரூ.1.60 லட்சத்தை விரைவில் அம்பிகாவின் பெற்றோரிடம் இருந்து பெற்றுத் தருவதாகவும் போலீஸார் கூறினர். அதை ஏற்றுக்கொண்ட ராஜண்ணாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

போலீஸ் ஸ்டேஷனில் திருமணம்

போலீஸ் ஸ்டேஷனில் திருமணம்

அதையடுத்து கடந்த 10-ஆம் தேதி சாம்ராஜ்நகர் போலீஸ் நிலையத்திலேயே வைத்து ராஜண்ணா-அம்பிகாவின் திருமணம் நடந்தது. போலீஸார் என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும் இந்த காலத்தில் போலீஸாரே வரதட்சிணை கொடுத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Samratnagar Police gave dowry to the parents of bride groom and they conducted the marriage after groom complaint against his parents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X