பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்ப்ரைஸ்.. சந்திரயான் லேண்டரிலிருந்து சிக்னல் வருவதற்கு இன்னும் கூட வாய்ப்பு இருக்கிறதாமே!

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    பெங்களூர்: சந்திரயான் 2, லேண்டர் மற்றும் ரோவர்களில் இருந்து, இஸ்ரோவுக்கு சிக்னல் வருவதற்கான வாய்ப்பு இன்னும் கூட இருப்பதாக தெரிவிக்கிறார் அண்ணா பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார்.

    சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனுக்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது.

    எனவே லேண்டர் மற்றும் அதற்கு உள்ளே இருக்கக்கூடிய ரோவர் ஆகியவற்றின், கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை.

     1 வாரம் டைம்.. நாசா நினைத்தால் அது நடக்கும்.. ஆனால்.. சந்திரயான் 2ல் அடுத்து இதுதான் நிகழும்! 1 வாரம் டைம்.. நாசா நினைத்தால் அது நடக்கும்.. ஆனால்.. சந்திரயான் 2ல் அடுத்து இதுதான் நிகழும்!

    திட்டம்

    திட்டம்

    விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கியதும், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து, அது சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்பதுதான் திட்டம் ஆகும்.

    இரு வகை

    இரு வகை

    ரோவர் நிலைமை என்ன ஆனது, லேண்டர் நிலைமை என்ன ஆனது, இனிமேல் என்ன நடக்கலாம் என்பது தொடர்பாக செந்தில்குமார் அளித்த விளக்கம் இதோ:

    நாம் இதை இருவகைகளில் பார்க்க முடியும். ஒன்று லேண்டர், இறங்கி நொறுங்கி விழுந்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் அல்லது ஏதாவது பள்ளத்தில் தரையிறங்கி இருந்தால் திட்டம் தோல்வியடைந்ததாக எடுத்துக்கொள்ள முடியும்.

    சிக்னல் வரலாம்

    சிக்னல் வரலாம்

    மற்றொரு பக்கம் பாஸிடிவ் ஆகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். அதாவது லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்கி இருக்கலாம் அதன் பிறகு ரோவர் பிரக்ஞானுக்கு கிடைக்க வேண்டிய எரிசக்தி சூரிய ஒளியிலிருந்து கிடைக்காமல் இருக்கலாம். சூரிய ஒளியிலிருந்து எரிசக்தி கிடைத்ததும் அது செயல்படத் தொடங்கி அங்கே இருந்து நமக்கு சிக்னல்கள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு செந்தில்குமார் சில நம்பிக்கையான வார்த்தைகள் தெரிவிக்கிறார்.

    பெரிய விஷயம்

    பெரிய விஷயம்

    இஸ்ரோ தலைவர் சிவன், இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கண்ணீர் மல்க உடைந்ததை பார்க்கும் போது, இதற்கான வாய்ப்பு மிக மிக கம்மி என்றே தோன்றுகிறது. ஒரு வேளை திடீரென சிக்னல் கிடைத்தால் அது மிகப்பெரிய விஷயம்தான்.

    English summary
    From the Chandrayaan 2, Lander and Rover, there is still the possibility of ISRO gets signal, said Dr Dr Anna University Senthil Kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X