பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இந்தி தெரியாது போடா".. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட் போட்ட பிரகாஷ் ராஜ்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தி திணிப்புக்கு எதிரான தமிழகத்தின் அதிரடி டி சர்ட் புரட்சி இப்போது கர்நாடகத்திலும் பரவியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் தானும் ஒரு டி சர்ட் போட்டு இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் ..இந்த இரு வாசகங்களும் சமீபத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

இந்தி திணிப்புக்கு எதிராக இந்த இரு வாசகங்களும் அடங்கிய டி சர்ட் போட்டுக் கொண்டு டிவிட்டரில் வைரலாக்கி விட்டனர் தமிழகத்தைச் சேர்ந்த பலரும்.

கங்கணாவிற்கு சப்போர்ட்.. தேசிய அளவில் திடீர் வைரல்.. பாஜகவில் இணைகிறாரா விஷால்.. உண்மை என்ன?கங்கணாவிற்கு சப்போர்ட்.. தேசிய அளவில் திடீர் வைரல்.. பாஜகவில் இணைகிறாரா விஷால்.. உண்மை என்ன?

பிசினஸ் வாய்ப்பு

பிசினஸ் வாய்ப்பு

மிகப் பெரிய அளவில் வைரலான இந்த இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் இன்று ஒரு பிசினஸ் வாய்ப்பையும் திருப்பூருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய வாசகங்கள் மட்டுமல்லாமல், வேறு சில வாசகங்களும் அடங்கிய டி சர்ட் தயாரித்துத் தரும் ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும், நல்ல பிசினஸாக இது மாறியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

கர்நாடகத்திலும் அதிரடி

கர்நாடகத்திலும் அதிரடி

இந்த நிலையில் இந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது கர்நாடகத்தையும் எட்டியுள்ளது. பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் ஒரு டிசர்ட் போட்டு அதிரடி போஸ் கொடுத்துள்ளார். அதை டிவிட்டரிலும் போட்டுள்ளார். கர்நாடக வரைபடத்துடன் கூடிய அந்த டி சர்ட்டில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்த வாசகம் இடம் பெற்றுள்ளது.

தில்லான பிரகாஷ் ராஜ்

தில்லான பிரகாஷ் ராஜ்

என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும்.. எனது கற்றுக் கொள்ளுதல் என்பது என்னுடைய விருப்பத்திற்குரியது. எனது வேர் மிகவும் ஆழமானது. எனது பெருமை எனது தாய்மொழி.. இந்தியைத் திணிக்காதே என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜின் இந்த டிவீட் வைரலாகியுள்ளது. கர்நாடத்தில் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் பலரும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் பாதையில்

தமிழகத்தின் பாதையில்

தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் இந்தி எதிர்ப்பு டி சர்ட் டிரண்ட் பரவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த டிரெண்டை ஆதரித்து பலரும், எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜின் துணிச்சலைப் பாராட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், அவருக்கு இந்தி தெரியாது என்று சொல்வது அவருக்கே சிரிப்பாக இல்லையா என்றும் கிண்டலடித்துள்ளனர்.

English summary
Versatile actor Prakash Raj has gone in Tamil Nadu way and has said I dont know Hindi, get lost in a T shirt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X