பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு ஒரு ஜல்லிக்கட்டு.. கர்நாடகாவிற்கு ஒரு கம்பாலா.. கலாச்சார காவலன் பிரணாப் செய்தது என்ன?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகத்தின் 200 ஆண்டுகளுக்கு முன் பழமைவாய்ந்த கம்பாலா போட்டிக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

Recommended Video

    Pranab Mukherjee Passed away | Oneindia Tamil

    எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் அதற்கென ஒரு கலாச்சாரம், வீர தீர செயல்கள், நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், மரபு உள்ளிட்டவை இருக்கும். இவை தொன்று தொட்டு வரும் பழக்கமாக இருக்கிறது.

    இதை எந்த காரணத்திற்காகவும் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அந்த வகையில் தமிழகத்திற்கு வீரத் தீர விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான், அந்த காலத்தில் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களே வீரமகன் என கருதப்பட்டனர்.

    பழுத்த அரசியல்வாதி.. நிறைந்த அனுபவம் கொண்ட நிதியமைச்சர்.. ஜனாதிபதியாக உயர்ந்து.. மறைந்த பிரணாப்! பழுத்த அரசியல்வாதி.. நிறைந்த அனுபவம் கொண்ட நிதியமைச்சர்.. ஜனாதிபதியாக உயர்ந்து.. மறைந்த பிரணாப்!

    மதுரை சுற்று வட்டாரம்

    மதுரை சுற்று வட்டாரம்

    ஆனால் நாளடைவில் இந்த பழக்கம் விளையாட்டு போட்டியாகவே மாறிவிட்டது. இதற்காக இன்றும் கூட மதுரை சுற்று வட்டார இளைஞர்கள் தங்களை தயார் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    இதையடுத்து மெரினாவில் ஜல்லிக்கட்டு புரட்சியே நடந்தது. ஏராளமான மக்கள் வெளியூர்களிலிருந்து வந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் அமைதியான முறையில் நடந்த இந்த போராட்டத்தை பார்த்த அப்போதைய முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சட்டசபையில் அவசர சட்ட மசோதாவை தாக்கல் செய்து மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவரும் பிரணாப்தான்.

    சீறி பாயும் காளைகள்

    சீறி பாயும் காளைகள்

    இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சீறி பாயும் காளைகளையும் அதை அடக்க பாயும் இளைஞர்களையும் காணும் போது பண்டைய கால சம்பவங்கள் கண் முன் தெரிகின்றன. தமிழகத்தை போல கர்நாடகாவுக்கு ஒரு கம்பாலா போட்டி ஆகும்.

    200 ஆண்டுகள்

    200 ஆண்டுகள்

    கம்பாலா போட்டிகள் கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் நடத்தப்படுவதாகும். இந்த விளையாட்டில் எருமை காளைகளை சேற்றில் விரட்டிச் செல்வர். 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்விளையாட்டு போட்டிக்கு விலங்குகள் நல வாரியத்தால் தடை விதிக்கப்பட்டது.

    மார்ச் மாதம்

    மார்ச் மாதம்

    இந்த போட்டிகள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடத்தப்படுவதாகும். இந்தப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையால் அந்த மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடக அரசு அவசர சட்ட மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியது. இந்த மசோதா ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பார்வைக்கு சென்றது. அவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். அது முதல் கம்பாலா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    English summary
    Ex President of India Pranab Mukherjee gave approval for Kambala in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X