பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்.. உங்கள் பணி வீணாகாது.. இஸ்ரோவுக்கு ராகுல் காந்தி மெசேஜ்

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    பெங்களூர்: நிலவில் தரையிறங்க வேண்டிய, சந்திரயான்-2 லேண்டர்- விக்ரம்- விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்ளாத நிலையில் உங்களின் பணி வீணாகாது என்று நம்பிக்கையளித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

    சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது.

    Rahul Gandhi tweet on Chandrayaan 2

    நிலவின் அருகே 2.51 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாலை 3.30 மணியளவில் ட்விட்டரில் ராகுல் காந்தி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

    அதில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: சந்திரயான் 2 நிலவு மிஷனின் நம்பமுடியாத சிறந்த பணிக்கு இஸ்ரோ குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்கள் பணி வீணாகாது. இது இன்னும் பல லட்சிய இந்திய விண்வெளி பயணங்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கவலை வேண்டாம் விஞ்ஞானிகளே.. மொத்த இந்தியாவும் உங்களோடு இருக்கிறது.. இஸ்ரோவில் மோடி உரைகவலை வேண்டாம் விஞ்ஞானிகளே.. மொத்த இந்தியாவும் உங்களோடு இருக்கிறது.. இஸ்ரோவில் மோடி உரை

    "இந்த பதட்டமான காலகட்டத்தில், மொத்த நாடும் இஸ்ரோ குழுவினருக்கு துணை நிற்கிறது. உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நம் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது. ஜெய் ஹிந்த்" என்று காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.

    English summary
    "Congratulations to the team at ISRO for their incredible work on the Chandrayaan 2 Moon mission. Your passion and dedication is an inspiration to every Indian. Your work is not in vain. It has laid the foundation for many more path breaking and ambitious Indian space missions," Rahul Gandhi tweeted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X