பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. எதிர்பார்க்கவேயில்லையே.. செம மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பெங்களூர் மக்கள்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஒரு வழியாக பெங்களூர் மக்கள் எதிர்பாரத்த அந்த நல்ல செய்தி காதில் விழுந்துவிட்டது. பயங்கர எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள், கார்டன் சிட்டி மக்கள்.

கார்டன் சிட்டி, ஏர் கண்டிஷன் சிட்டி என்றெல்லாம், இயற்கை எழிலுக்கும், குளுகுளு வானிலைக்கும் பெயர் பெற்றது பெங்களூர். ஆனால், 2019ம் ஆண்டு கோடைகாலம், இந்த நற்பெயர்களையெல்லாம் துவம்சம் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் பலரும், நாம் இருப்பது வேலூரிலா அல்லது பெங்களூரிலா என்று சந்தேகத்தோடு வானத்தை எட்டிப் பார்த்து சுட்டெரிக்கும் சூரியனிடம் அட்ரஸ் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அமைச்சர் முன்னிலையில்.. அதிமுக வேட்பாளரை திட்டிய அன்புமணி ராமதாஸ்.. என்னாச்சு, ஏன் இப்படி? அமைச்சர் முன்னிலையில்.. அதிமுக வேட்பாளரை திட்டிய அன்புமணி ராமதாஸ்.. என்னாச்சு, ஏன் இப்படி?

பெருமை

பெருமை

ப்ராப்பர் பெங்களூர்வாசிகளோ, காலம் மாறிப்போச்சுப்பா.. ஒரு காலத்துல பெங்களூர் எப்படி இருந்திச்சி தெரியுமா.. வெயில் காலத்துல கூட வியர்க்கவே செய்யாது. இப்போ அப்படியா.. மரத்தை வெட்டிட்டாங்க, ஊரு பெருசாகிப்போச்சி என மூச்சுக்கு முன்னூரு தடவை தங்கள் நகரின் கடந்த கால பெருமையை சொல்லி மனசை தேற்றினர்.

கருணை

கருணை

ஆனால், கடவுள் இருக்கான் கொமாரு என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம் அவர்கள். ஆம்.. எங்கிருந்தோ வந்து திரண்ட மேகங்கள் இன்று மாலை முதல் பெங்களூரில் வட்டமடிக்கின்றன. நேற்று சிக்மகளூர், குடகு போன்ற பகுதிகளில் வருண பகவான் சற்று கருணை காட்டிய நிலையில், கர்நாடக தலைநகர் பக்கமும் அவர் கருணை பார்வை கிடைத்துள்ளது.

இடியுடன் கூடிய மழை

வெப்ப சலனம் காரணமாக பெங்களூர் உட்பட தெற்கு கர்நாடகா பகுதிகளில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய, மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வு அமைப்பினர் கணித்துள்ளனர். அதற்கேற்ப பெங்களூரின் பனசங்கரி, பன்னேருகட்டா ரோடு, பேகூர் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.

கர்நாடக வருவாய் துறை அறிவிப்பு

இதேபோல.. கர்நாடக வருவாய் துறை செயலாளர் வெளியிட்ட ட்வீட்டில், பெங்களூரில் ஓரளவுக்கு மேக மூட்டம் இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மழை மண்ணில் விழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பெங்களூர் மக்கள்.

English summary
Partly cloudy sky, Isolated light to moderate rains associated with Thunderstorm activity likely over BBMP area in the evening or late evening hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X