பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல் போன்ற காற்று.. வேரோடு சாய்ந்த மரங்கள்.. வெளுத்து வாங்கும் மழை.. 2வது நாளாக தடுமாறும் பெங்களூர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பெரும் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. எதிரே வரும் நபர்கள் கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மிக அடர்த்தியாக இந்த மழை இருந்தது. பறவைகள் கூட அந்த மழையை எதிர்த்து மறக்க முடியாத அளவுக்கு அதன் அடர்த்தியும், காற்றின் வேகமும் இருந்தது.

Rain lashes Bangalore again today, hailstorm reported in many parts

இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மேல் மறுபடியும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடும் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி வருகிறது. பீன்யா, யஸ்வந்த்பூர், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், கேஆர்மார்க்கெட், சிவாஜி நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதலில் மழை ஆரம்பித்தது. பிறகு அது தெற்கு பெங்களூரின், பொம்மனஹள்ளி, பிடிஎம் லேஅவுட், பன்னேர்கட்டா ரோடு, கோரமங்களா, மடிவாளா போன்ற பகுதிகளுக்கும் தொடர்ந்தது.

புயல் போன்ற காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. நகரில் இதமான தட்பவெப்பம் நிலவிய போதிலும் கூட, மின்சாரம் இல்லாத காரணத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இடி ஓசையும் நகர் முழுக்க எதிரொலிக்கிறது.

பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால், மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்பட்டனர். காவல்துறையினர் மரங்களை அகற்றுவதை பார்க்கமுடிந்தது. பெங்களூருவில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சாலைகளில் பனிக்கட்டி போல ஆலங்கட்டி மழை விழுந்து கிடந்ததை மறக்க முடியாது.

Recommended Video

    பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை - வீடியோ | Oneindia Tamil

     முதல்வர் பொது நிவாரண நிதி... வெளிப்படை தன்மை கோரி வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ் முதல்வர் பொது நிவாரண நிதி... வெளிப்படை தன்மை கோரி வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்

    English summary
    Rain lashes Bangalore again today evening with heavy wind, this leads many trees uprooted and power cut chance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X