பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானம் பொத்துக் கொண்டதா.. ஆகாய கங்கை போல கொட்டிய மழை.. பெங்களூரில் பெருக்கெடுத்த வெள்ளம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: வானம் பொத்துக் கொண்டு ஊற்றியதோ என்று எண்ணும் அளவுக்கு பெங்களூரில் இன்று மாலை கன மழை பெய்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது.

Rain lashes Bangalore since today evening

சென்னை நகரில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டருக்கும், அதிகமாக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain lashes Bangalore since today evening

சென்னை மழை தாக்கத்தின் காரணமாக நேற்று பெங்களூரில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மாலை கருமேகங்கள் திரண்டு வந்து பெங்களூரில் கன மழை கொட்டி தீர்த்தது.

Rain lashes Bangalore since today evening

பொம்மனஹள்ளி, பேகூர், ஹெச்எஸ்ஆர் லேஅவுட், மடிவாளா, ஆடுகோடி, பன்னேர்கட்டா ரோடு, ஜெயநகர், பனசங்கரி, பசவனகுடி, ராஜராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், ராஜாஜி நகர், ஹெப்பால், லால்பாக், மைசூர் சாலை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.

Rain lashes Bangalore since today evening

பனசங்கரி அருகே உள்ள வித்யாபீடம் பகுதியில் ஒரு மணி நேரத்தில் சுமார் 7 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. ஒரே நேரத்தில் வானத்தை பொத்துக் கொண்டு தண்ணீர் வந்தது போல மழை பெய்ததால் சாலையில் செல்வோருக்கு எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை. கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

English summary
Rain lashes Bangalore scenes friday evening flood water can be seen on the road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X