பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'இந்த நாளுக்காகத்தான் அனைத்தும்' தேஜஸ் விமானத்தில் ராஜ்நாத் திரில் பயணம்.. கிடைத்தது சூப்பர் பெருமை

Google Oneindia Tamil News

Recommended Video

    தேஜஸ் விமானத்தில் ராஜ்நாத் திரில் பயணம்..வீடியோ

    பெங்களூரு: பெங்களூருவில் இன்று காலை ஏர் வைஸ் மார்ஷல் திவாரியுடன் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திரில்லான பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம் தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமை ராஜ்நாத் சிங்குக்கு கிடைத்துள்ளது.

    தேஜஸ் ரக போர் விமானத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி 40 தேஜஸ் ரக விமானங்களை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் 50 கோடி செலவில் மேலும் 80 தேஜஸ் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கு பாதுகாப்புத்துறை மீண்டும் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    rajnath singh first Defence Minister to fly in the made-in-India fighter jet of Tejas

    இந்த தேஜஸ் விமானத்தின் பாகனங்கள் உள்பட விமானத்தின் அனைத்து பாகங்களுமே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது மணிக்கு 2005 கிலோமீட்ட்ர் வேகத்தில் பறக்கும் திறன் உடைய இந்த விமானம் மிக்-21 ரக போர் விமானத்திற்கு மற்றாக தயாரிக்கப்பட்டது

    கடற்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தை விமானம் தாங்கி கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கும் முயற்சி அண்மையில் கோவாவில் வெற்றிகரமாக நடந்தது.

    இதையடுத்து பெங்களூரில் இன்று நடைபெறும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தயாரிப்புகளின் கண்காட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

    அங்கு விமானிகள் அணியும் உடை அணிந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை ஏர் வைஸ் மார்ஷல் திவாரியுடன் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பறந்தார். இதன் மூலம் தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமை ராஜ்நாத் சிங்குக்கு கிடைத்துள்ளது. "இந்த நாளுக்காக அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது" என்று ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார். இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறுகையில், போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலையை இந்தியா அடைந்துள்ளது. ஏர் வைஸ் மார்ஷல் திவாரி கூறியபடி தேஜஸ் போர் விமானத்தை சிறிது நேரம் இயக்கிப் பார்த்தேன் என்றார்

    English summary
    rajnath singh first Defence Minister to fly in the made-in-India fighter jet Tejas The aircraft took off from the HAL airport in Bengaluru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X